இங்கிலாந்து அணிக்கு வந்த புதிய சோதனை.!

YoYo

இந்தியா கிரிக்கெட் வீரர்களுக்கு “யோ யோ” டெஸ்ட் ஒரு கட்டாயமையமாக்கபட்ட ஒரு தேர்வாக மாறிவிட்டது. இந்த டெஸ்டில் தேர்ச்சி பெரும் வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் சேர்க்கப்டுகின்றனர். இந்த டெஸ்டில் தேர்ச்சியடைய முடியாமல் பல்வேறு அனுபவமிக்க வீரர்களும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

https://twitter.com/englandcricket/status/1023614400123600896[/emebd]

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தான் இந்த “யோ யோ” தலைவலி என்று பார்த்தல் தற்போது இங்கிலாந்து அணி வீரர்களுக்கு இந்த டெஸ்ட் வைக்கப்பட்டு வருகிறது. இந்திய அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது இரு அணிகளுக்காக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி துவங்க உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கப்போகும் இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியான நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் சிலர் ‘யோ யோ ‘ டெஸ்டில் பங்குபெறும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இங்கிலாந்து அணி வீரர் குக் மற்றும் இதர வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த “யோ யோ” டெஸ்ட் வெறும் பயிற்சிகாக மட்டும் தான் நடத்தப்பட்டுள்ளதா, இல்லை இந்த டெஸ்ட் மூலம் வீரர்கள் வடிகட்டபடுவார்களா என்று தெரியவில்லை.