ENG vs SL : ஒரே தோல்வியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழக்கும் அளவிற்கு வந்த இங்கிலாந்து அணி – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் 27 வது போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து

England
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 27 வது போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

eng-v-sl

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இலங்கை அணி. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 232 இரண்டு அடித்தது அதிகபட்சமாக மேத்யூஸ் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பிறகு 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் மலிங்கா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களுக்கு 43 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Malinga-2

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் 10 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கும். ஆனால் நேற்றைய போட்டியில் தோல்வியுற்றதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு காத்திருக்கிறது. ஏனென்றால் இங்கிலாந்து அணி இதுவரை இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக கடந்த 1992 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக வெற்றி பெற்றதே இல்லை.

stokes

இப்போதைக்கு இங்கிலாந்துக்கு 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. அந்த 3 போட்டியும் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருப்பதால் இந்த மூன்று போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் முதல் நான்கு இடத்தில் இருக்கும் இல்லையென்றால் அரை இறுதி வாய்ப்பை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement