- Advertisement -
உலக கிரிக்கெட்

16 தோல்வி.. ஒருவழியாக ஆஸியை சாய்த்த இங்கிலாந்து.. 15 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரில் முதல் 3 போட்டிகளிலும் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றது. மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையில் அதிரடியாக விளையாடி கோப்பையை வெல்வோம் என்று சொன்ன இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்தது. அந்த சூழ்நிலையில் 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 5.00 மணிக்கு துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசி ஆஸ்திரேலியாவில் வெறும் 152 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக மைக்கல் நீசர் 35, உஸ்மான் கவாஜா 29, அலெக்ஸ் கேரி 20 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாப் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்தை வெறும் 110 ரன்களுக்கு சுருட்டி வீசிய ஆஸ்திரேலியா நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தது.

- Advertisement -

இங்கிலாந்து அசத்தல்:

அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 41, கஸ் அட்கின்ஷன் 28 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 3, மைக்கல் நீசர் 4, மிட்சேல் 2 ஸ்டார்க் விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக 42 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியா குறைந்தது 200க்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வேகத்துக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் மீண்டும் அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வெறும் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி மிரட்டியது. முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 24*, டிராவிஸ் ஹெட் 46 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங் 2, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3, பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

- Advertisement -

15 வருடம் 16 தோல்விகள்:

இறுதியாக 175 இலக்கைத் துரத்திய இங்கிலாந்துக்கு பென் டக்கெட் அதிரடியாக 34 (26) ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். அதைப் பயன்படுத்தி ஜாக் கிராவ்லி 27, ஜேக்கப் பெத்தல் 40, ஹாரி ப்ரூக் 18*, ஜோ ரூட் 18 ரன்கள் அடித்து இங்கிலாந்தை 178/6 ரன்களை தொட வைத்தார்கள். அதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 15 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: ராகுல் டிராவிடை பின்னுக்கு தள்ளி டெஸ்ட் போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய ஸ்டீவ் ஸ்மித் – விவரம் இதோ

கடைசியாக இங்கிலாந்து 2010/11 ஆஷஸ் கோப்பையில் ஆஸ்திரேலியாவை சிட்னி போட்டியில் தோற்கடித்திருந்தது. ஆனால் அதன் பின் கடந்த 15 வருடங்களில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய 18 போட்டிகளில் 16 தோல்விகள், 2 ட்ராவை சந்தித்த இங்கிலாந்து 1 வெற்றியைக் கூட பெறவில்லை. அந்தத் தொடர் தோல்விகளை இப்போட்டியில் உடைத்துள்ள 3 – 1* (5) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்திக்கும் அவமானத்திலிருந்து தப்பியுள்ளது.

- Advertisement -