டை ஆன இறுதி போட்டி, டை ஆன சூப்பர் ஓவர். பிறகு எப்படி இங்கிலாந்து வெற்றி பெற்றது – இப்படி ஒரு விதி இருக்கா ?

England

உலக கோப்பை இறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று மோதின.

eng vs nz

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன் பிறகு ஆட துவங்கிய இங்கிலாந்து அணி, ஐம்பது ஒவேரில் 241 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக மேட்ச் டை ஆனது. அதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் நிர்ணயிக்கப்பட்டது. அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.

guptill

போட்டி முடிந்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் அவர்கள் கூறியதாவது : இந்த போட்டியில் பல விஷயங்கள் நடந்துவிட்டன. நான் வில்லியம்சன் மற்றும் அவரது அணிக்கு வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போராட்டத்திற்கு இரு அணிகளும் தகுதியான ஒன்று என்று நினைக்கிறன்.

- Advertisement -

stokes

வில்லியம்சன் அவரது அணியை மிக அருமையாக வழிநடத்தினார். இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் இணைந்து ஆடிய அருமையான ஆட்டமே எங்களுக்கு வெற்றியை தேடி தந்தது. மேலும் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய அவர்களை அனுப்பினேன் அந்த முடிவு எங்களது அணிக்கு சிறப்பான வெற்றியை தேடித் தந்தனர் என்று அவர் கூறினார்.