399 ரன்ஸ் தானா.. நாங்க அதையே அசால்ட்டா செய்வோம்ன்னு மெக்கல்லம் சொல்லிருக்காரு.. ஆண்டர்சன் சவால் பேட்டி

- Advertisement -

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 399 என்ற இலக்கை சேசிங் செய்து வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்துக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்த உதவியுடன் போராடி 396 ரன்கள் குவித்து அசத்தியது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பின்னடைவை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜேக் கிராவ்லி 76, பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அசால்ட்டா செய்வோம்:
அதிகபட்சமாக சுப்மன் கில் 104 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 4 விக்கெட்களை எடுத்தார். இறுதியில் 399 ரன்களை துரத்தும் இங்கிலாந்து மூன்றாவது நாள் முடிவில் 67/1 ரன்களுடன் போராடி வருகிறது. கைவசம் 9 விக்கெட்டுகளை வைத்திருக்கும் அந்த அணிக்கு இன்னும் 322 ரன்கள் தேவைப்படுவதால் வெற்றி இரு பக்கமும் சமமாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.

அதே சமயம் 387 ரன்களுக்கு மேல் இந்திய மண்ணில் எந்த அணியும் வெற்றிகரமாக சேச்சிங் செய்ததில்லை. எனவே நான்காவது இன்னிங்ஸில் மைதானம் பேட்டிங்க்கு சவாலாக மாறும் என்பதால் இப்போட்டியில் இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் 399 அல்ல 600 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அதை நம்மால் சேசிங் செய்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் கொடுத்துள்ளதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே இந்த இலக்கை சேசிங் செய்து தங்களால் வெல்ல முடியும் என்று சவால் விடும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒருவேளை அவர்கள் 600 ரன்கள் அடித்தாலும் அதை நாம் சேசிங் செய்ய செல்ல வேண்டும் என்று எங்களுடைய பயிற்சியாளர் நேற்றிரவு தெரிவித்தார். எனவே நாளை நாங்கள் சேசிங் செய்ய ஒவ்வொருவரும் முயற்சிப்போம். இன்னும் எங்களுக்கு 180 ஓவர்கள் இருக்கிறது என்பதை அறிவோம்”

இதையும் படிங்க: கண்டிப்பா அதுக்காக அப்பா திட்டுவாரு.. நாளைக்கு எங்களோட திட்டம் இது தான்.. சதமடித்த கில் பேட்டி

“இருப்பினும் நாங்கள் அதை 60 – 70 ஓவரில் சேசிங் செய்து முடிக்க முயற்சிப்போம். அது தான் நாங்கள் விளையாடும் வழியாகும். கடந்த 2 வருடங்களாக நாங்கள் விளையாடிய வழியிலேயே நாளை விளையாடுவோம் என்பதில் எந்த வித்தியாசமும் இல்லை. அதில் வெல்கிறோம் அல்லது தோகிறோம் என்பது முக்கியமல்ல. ஏனெனில் நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் குறிப்பிட்ட வழியில் வெல்ல விரும்புகிறோம். அதை நாளையும் செய்வோம் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement