இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் இந்திய அதிரடி வீரர்..! யார் தெரியுமா..?

saha
- Advertisement -

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டி20 தொடர் வெற்றியை எண்ணி இந்திய அணி மகிழ்ந்து வருகின்றனர். ஆனால்,காயம் காரணமாக இந்த தொடரில் வாஷிங்டன் சுந்தர், பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை.
saha
சில நாட்களுக்கு முன்னர் இந்த தொடரில் விளையாடிய புவனேஸ்வர் குமாரும் காயம் காரணமான தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வரும் விர்த்திமன் சாஹா அணியில் மீண்டும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் தற்போது அவர் மீண்டும் அணியில் இடம்பெற போவதில்லை என்ற செய்தி இந்திய அணிக்கு மற்றுமொரு பின்னடைவாக கருதப்படுகிறது.

இங்கிலாந்து அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும், ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது. இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விர்த்திமான் சாஹா இடம்பெற்றிருந்தார். ஐபிஎல் போட்டியின் போது பெருவிரலில் காயம் ஏற்பட்டதால் அவர் இந்த தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சாஹாவிற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றிருந்தார்.
saha
ஆனால், டெஸ்ட் போட்டி துவங்கத்திற்கு முன்பு காயம் குணமடைந்து விர்த்திமான் சாஹா அணியில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் சமீபத்தில் வந்த தகவலின்படி அவருடைய காயம் இன்னும் மோசமானதாக இருக்கிறது .அவர் இன்னும் தனது பெருவிரலில் மிருதுவான பிளாஸ்டர் ஒன்றை அணிந்துள்ளார். தற்போது அவரால் கொஞ்சம் தான் பயிற்சியில் ஈடுபட முடிகிறது. எனவே அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.

Advertisement