இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி 31 ரன்கள் விதியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி துவங்க உள்ளது.
இங்கிலாந்து நாட்டின் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் இரண்டு மாற்றங்களை செய்துள்ளது. முதல் மாற்றமாக முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பீல்டிங் ஆகிய இரண்டிலும் சுதப்பிய டேவிட் மலானுக்கு பதிலாக உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் 20 வயதே ஆனா இளம் வீரர் ஆலிவர் போப்பிற்கு வாய்ப்பளிக்கபட்டுள்ளது.
வலது கை பேட்ஸ்மேனான ஆலிவர் போப், இங்கிலாந்து கவுண்டி அணிகளில் விளையாடி 684 ரன்களை குவித்தவர். எனவே, இவர் டேவிட் மலானுக்கு பதிலாக நல்ல மாற்றாக இருப்பார் என்று எதிர்பார்கப்படுகிறது. அதே போல இங்கிலாந்து அணியின் இரண்டாவது மாற்றமாக பென் ஸ்டோக் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்டதால் அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் உள்ளது என்பது குறிப்படத்தக்கது. தற்போது அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் இந்த இரு மாற்றங்களும் இங்கிலாந்து அணிக்கு பலமா, பாதகமா என்று இரண்டாவது டெஸ்டில் தான் தெரியும்.