Facebook Instagram
  • Home
  • ஐ.பி.எல்
  • இந்திய கிரிக்கெட்
  • டி20
  • கபடி
Search
Cric Tamil Logo Cric Tamil
Cric Tamil Logo Cric Tamil Logo
  • Home
  • ஐ.பி.எல்
  • இந்திய கிரிக்கெட்
  • டி20
  • கபடி
Home கிரிக்கெட் செய்திகள் | Today Cricket news in Tamil உலக கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் மட்டுமல்ல இங்கிலாந்து அணியும் எடுத்த அதிரடி முடிவு. ஜூலை 8 கிரிக்கெட் ஸ்பெஷல்...

வெஸ்ட் இண்டீஸ் மட்டுமல்ல இங்கிலாந்து அணியும் எடுத்த அதிரடி முடிவு. ஜூலை 8 கிரிக்கெட் ஸ்பெஷல் – விவரம் இதோ

By
Siva
-
Jul 3, 2020, 12:57PM IST
EngvsWI
- Advertisement -

உலகம் முழுவதும் நிறம், சாதி, மதம் என அனைத்தையும் வைத்து பாகுபாடு காட்டும் செயல் தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிரான போராட்டமும் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த மாதம் அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு தற்போது வரை போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

wivseng

- Advertisement -

இதன் காரணமாக சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் ‘Black Lives Matter’ என்ற வாசகம் பெரும் பிரபலமானது. ஒவ்வொரு தளத்திலும் இந்த ‘Black Lives Matter’ வாசகம் குரலாக எழுப்பப்பட்டு இனவாதத்திற்கு எதிராக எதிர்ப்பு பதியப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை எட்டாம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்களது ஜெஸ்ஸியின் கழுத்து பட்டையில் ‘Black Lives Matter’ என்ற வாசகத்தை பொறித்து விளையாட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனாக ஜாசன் ஹோல்டர் கூறியதாவது.. இனவாதத்திற்கு எதிராக எங்களது குரல் எப்போதும் ஒன்றுபட்டு ஒலிக்கிறது. இந்த பிரச்சனை எங்களுக்கு பிரச்சனை அல்ல. இது எங்களது கடமை.நாங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படும் என்று நினைக்கிறோம்.

Holder

இதனைத் தொடர்ந்து நீதியை நிலைநாட்டுவதற்கும் சமத்துவத்திற்கு ஆதரவாகவும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராடுவோம். நாங்கள் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் ஜேசன் ஹோல்டர்.

- Advertisement -

கரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பிற்கு பிறகு நடக்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும் ஜூலை 8-ஆம் தேதி முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை 3 டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனவாதத்திற்கு எதிரான லோகோ அணிந்து விளையாட இங்கிலாந்து அணி வீரர்களும் முழுச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் சமூக மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

BLack

ஏற்கனவே இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் தனது டிவிட்டர் பக்கத்தில், “கறுப்பின மக்களுக்காக நாம் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். சமத்துவம் மற்றும் சமூக நீதி கிடைப்பதற்கு மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் தேவை” என்று தெரிவித்தார். இனவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து அணி வீரர்கள் முன்வந்து செய்ய இருக்கும் அவர்களது இந்த முடிவு பலரது முடிவை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
  • TAGS
  • Black Lives Matter
  • ENG vs WI
  • Logo
  • Test Series
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Siva

    RELATED ARTICLESMORE FROM AUTHOR

    Karanbir Singh and Rohit Sharma
    உலக கிரிக்கெட்

    பறிபோன ரோஹித் சர்மாவின் மகுடம்.. ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய ஆஸ்திரிய வீரர் – விவரம் இதோ

    Kieron Pollard and Gayle
    உலக கிரிக்கெட்

    டி20 போட்டிகளில் கிரிஸ் கெயிலின் வரலாற்று சாதனையை முறியடித்த கைரன் பொல்லார்டு – விவரம் இதோ

    Rohit and Kallis
    உலக கிரிக்கெட்

    ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா – விவரம் இதோ

    விளம்பரம்

    சமூக வலைத்தளம்

    173,445FansLike
    6,500FollowersFollow
    1,600SubscribersSubscribe

    Popular category

    • இந்திய கிரிக்கெட்23824
    • ஐ.பி.எல்10250
    • உலக கிரிக்கெட்4681
    • உலகக் கோப்பை 20231291
    • ஆசிய கோப்பை816

    விளம்பரம்

    - Advertisement -
    Logo Footer
    ABOUT US
    We provide latest cricket news in Tamil language. Read More..

    Privacy Policy

    Terms and Condition

    Our Network

    Dheivegam
    Recipes Hindi
    Contact us: [email protected]
    FOLLOW US
    Facebook Instagram
    • Ethics Policy
    • Corrections policy
    • Editorial Board Info
    • Ownership & funding information
    • Contact Us
    © crictamil.in