மாபெரும் ரிஸ்க் எடுத்த இங்கிலாந்து, சவாலில் பாகிஸ்தான் மண்ணை கவ்வுமா – சாதிக்குமா? பரபரப்பான விவரம் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ள அந்த அணி டிசம்பர் 1ஆம் தேதியன்று ராவல்பிண்டி நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி தார் ரோட் போல இருந்த பிட்ச்சை பயன்படுத்தி உலகத்தரம் வாய்ந்த பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி முதல் இன்னிங்ஸில் 657 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு 233 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜாக் கிராவ்லி 122 ரன்களும் பென் டன்கட் 107 ரன்களும் எடுக்க மிடில் ஆர்டரில் ஓலி போப் 107 ரன்களும் ஹரி ப்ரூக் 153 ரன்களும் எடுத்து அசத்தினார்கள். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஜாஹித் முகமது 4 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிசை துவங்கிய பாகிஸ்தான் நாங்களும் சொந்த மண்ணில் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் ஆமை வேக ஆட்டத்தை கையிலெடுத்து நிதானமாக விளையாடினாலும் 557 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ரிஸ்க் முடிவு:
அந்த அணிக்கும் 225 ரன்கள் அபார ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அசாத் சபிக் 114 ரன்களும் இமாம்-உல்-ஹக் 121 ரன்களும் எடுக்க மிடில் ஆர்டரில் கேப்டன் பாபர் அசாம் 136 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் வில் ஜாக்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதைத்தொடர்ந்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்த பாகிஸ்தான் பவுலர்கள் பென் டன்கட் 0, ஓலி போப் 15, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கினாலும் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 50, ஜோ ரூட் 73, ஹரி ப்ரூக் 87 என முக்கிய வீரர்கள் மீண்டும் அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.

அதனால் 4வது நாள் தேநீர் இடைவேளையின் போது 264/7 எடுத்திருந்த இங்கிலாந்து அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தன்னுடைய 2வது இன்னிங்ஸை தைரியமாக டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதனால் 343 ரன்களை சேசிங் செய்ய துவங்கிய பாகிஸ்தானுக்கு அசாத் சபிக் 6 ரன்னில் அவுட்டாகி சென்ற நிலையில் கேப்டன் பாபர் அசாம் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 25/2 என தடுமாறிய அந்த அணிக்கு அசார் அலி காயத்தால் வெளியேறினாலும் இமாம்-உல்-ஹக் 43* (60) ரன்களும் ஷாஹீல் 24* (42) ரன்களும் எடுத்து ஓரளவு மீட்டெடுத்த போது 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

தற்போதைய நிலைமையில் 80/2 ரன்கள் எடுத்துள்ள பாகிஸ்தானுக்கு கடைசி நாளில் வெற்றிக்கு 263 ரன்கள் தேவைப்படுகிறது. மறுபுறம் 8 விக்கெட்டுகளை எடுத்தால் வெற்றி சுவைக்கலாம் என்ற தில்லுக்கு துட்டு ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்து தயாராகியுள்ளது. முன்னதாக இப்போட்டியை முன்கூட்டியே இங்கிலாந்து டிக்ளர் செய்தது அனைத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களை ஆச்சரியப்பட வைத்தது. ஏனெனில் முதல் நாளிலேயே 500 ரன்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக உலக சாதனை படைத்த இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் மேற்கொண்டு பேட்டிங் செய்தால் இப்போட்டி டிராவில் முடிவடையும் என்பதை கருத்தில் கொண்டு தார் ரோடு போல இருக்கும் பிட்ச்சுக்கு பயப்படாமல் ஆனதாகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற ரிஸ்க்கான முடிவை எடுத்தது.

இதுவே வேற அணியாக இருந்தால் உலக சாதனை படைக்கும் அளவுக்கு முதல் இன்னிங்ஸில் விளையாடி விட்டு ஏன் இறுதியில் தோற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்படி ஒரு முடிவை பெரும்பாலும் எடுக்க மாட்டார்கள். ஆனாலும் புதிய கேப்டன் – பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் ஏற்கனவே அதிரடியான அணுகு முறையை பின்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைவரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இங்கிலாந்தை வெற்றிகரமாக மாற்றியுள்ள நிலையில் இப்போட்டியில் மீண்டும் ஒரு தைரியமான முடிவை எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

இதில் அந்த அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இதுவரை இப்போட்டியில் பாகிஸ்தானை விட இங்கிலாந்து தான் பவுலிங்கில் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இருப்பினும் தார் ரோடு பிச்சை பயன்படுத்தி சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் இந்த இலக்கை சேசிங் செய்து இந்த சவாலில் பாகிஸ்தான் வெல்லுமா இல்லை மண்ணை கவர்மா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement