
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதை முடித்துக் கொண்டு ஜனவரி மாதம் தாயகம் திரும்பும் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடுகிறது. அந்த சுற்றுப் பயணத்தில் 5 டி20 மற்றும் போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.
அதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் துவங்கும் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய சுற்றுப்பயணத்திற்கான தங்கள் அணியை இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் சேர்த்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான அணியையும் இப்போதே இங்கிலாந்து அறிவித்துள்ளது.
அந்த 2 அணிகளுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இந்திய ஒருநாள் தொடர் மட்டுமின்றி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியிலும் காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஜோ ரூட் நீண்ட நாட்கள் கழித்து ஒருநாள் அணிக்கு திரும்பி சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாட உள்ளார்.
2025 இந்திய டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில் சால்ட், மார்க் வுட், சக்கிப் மஹ்முத், அடில் ரசித், லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பென் டக்கெட், பிரைடன் கார்ஸ், ஹரி ப்ரூக், ஜேக்கப் பேத்தல், கஸ் அட்கின்ஷன், ஜோப்ரா ஆர்ச்சர், ரெஹன் அஹ்மத்
2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் இந்திய ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில் சால்ட், மார்க் வுட், சக்கிப் மஹ்முத், அடில் ரசித், லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பென் டக்கெட், பிரைடன் கார்ஸ், ஹரி ப்ரூக், ஜேக்கப் பேத்தல், கஸ் அட்கின்ஷன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜோ ரூட்
இதையும் படிங்க: 36 ரன்ஸ்.. தெ.ஆ அணியை சொந்த மண்ணில் தெறிக்க விட்ட பாகிஸ்தான்.. யாரும் செய்யாத உலக சாதனை
2025 இந்தியா – இங்கிலாந்து டி20 அட்டவணை:
ஜனவரி 22: முதல் டி20, கொல்கத்தா
ஜனவரி 25: 2வது டி20 சென்னை
ஜனவரி 28: 3வது டி20, ராஜ்கோட்
ஜனவரி 31: 4வது டி20, புனே
பிப்ரவரி 2: 5வது டி20, மும்பை
2025 இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் அட்டவணை:
பிப்ரவரி 6: முதல் ஒன்டே, நாக்பூர்
பிப்ரவரி 9: 2வது ஒன்டே, கட்டாக்
பிப்ரவரி 12, 3வது ஒன்டே, அஹ்மதாபாத்