5 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிப்பு. ரீஎன்ட்ரி கொடுத்த சீனியர் வீரர் – லிஸ்ட் இதோ

indvseng

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ இந்திய அணி இந்தத் தொடரை கைப்பற்றும் என்கிற காரணத்தினால் இந்த ஐந்தாவது போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

IND

அதே வேளையில் அடுத்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதன் மூலம் இந்த தொடரை சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த முக்கியமான 5-வது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்க உள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த 5-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Root

அந்த அணியில் தனது மனைவியின் பிரசவத்திற்காக விடுப்பு எடுத்துக்கொண்ட அணியின் சீனியர் வீரர் ஜோஸ் பட்லர் மீண்டும் திரும்பியுள்ளார். இது அந்த அணிக்கு தற்போது பலத்தை சேர்த்துள்ளது. சமீபத்தில் இரண்டாவது குழந்தைக்கு தந்தையான ஜோஸ் பட்லர் மேலும் சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் மீண்டும் அணியில் இணைவதாக அறிவித்துள்ளார் .

- Advertisement -

buttler

அதன்படி அடுத்த 5-வது போட்டிக்கான இங்கிலாந்து அணி இதோ : ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ரோரி பர்ன்ஸ், சாம் கரன், ஆலி போப், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஹஸீப் ஹமீது, டேன் லாரன்ஸ், ஜாக் லீச், டேவிட் மலான், ஓவர்டன், ராபின்சன், க்றிஸ் வோக்ஸ், மார்க் வுட்

Advertisement