முட்டாள்தனமா பேசாதீங்க..! முன்னாள் கேப்டனுக்கு அடில் ரஷித் கொடுத்த பதிலடி!

Rashid
Rashid
- Advertisement -

இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணியும் ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியுள்ளது. இதை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது.

England Nets Session

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியில் சூழல் பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் சேர்க்கப்பட்டதிற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் ஆதில் ரஷீத் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து தனது கருத்தை தெரிவித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வேகன் தெரிவிக்கையில்.”குறுகிய கால டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்த ஒருவரை எப்படி திடீரென்று டெஸ்ட் அணியில் சேர்ப்பீர்கள். இது மிகவும் அபத்தமானது ” என்று கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் மைக்கேல் வேகன் கூறிய கருத்தை விமர்சித்துள்ள ஆதில் ரஷீத் “மைக்கேல் வேகன் அதிகம் பேசுகிறார். அவர் பேசுவதை அனைவரும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், யாரும் அவர் பேசுவதை .ஒரு பொருட்டாக கண்டு கொள்ளவில்லை.அவர் எந்த கோவத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை.சில சமயம் மூத்த வீரர்கள் இளைய வீரர்களை பற்றி முட்டாள் தனமாக பேசுவார்கள். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றுள்ளேன் என்று அறிவிக்கவில்லை. சில மூத்த பண்டிதர்கள் என்னை அழைத்ததால் நான் வந்தேன் ” என்று கிண்டலாக பதில் கூறியுள்ளார்.

adil-rashid

இங்கிலாந்துக்காக 10 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஆதில் ரஷீத் இதுவரை 38 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். அதன்பிறகு,அவர் டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடாததால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி குறுகியகால டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட போவதாக ஆதில் ரஷீத் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement