- Advertisement -
உலக கிரிக்கெட்

351 ரன்ஸ்.. ஆஸியை பந்தாடிய பென் டக்கெட் இரட்டை உலக சாதனை.. இங்கிலாந்து அணி 21 வருட உலக சாதனை

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 22ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி மதியம் 2.00 மணிக்கு துவங்கியது. உலகின் டாப் 2 அணிகளான ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதிய அந்தப் போட்டிக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்துக்கு பில் சால்டை 10 ரன்களில் அவுட்டாகிய பென் ட்வார்சுய்ஸ் அடுத்ததாக வந்த ஜேமி ஸ்மித்யும் 15 ரன்களில் பெவிலியன் அனுப்பினார். அதனால் 43-2 என தடுமாறிய இங்கிலாந்துக்கு மறுபுறம் பென் டக்கெட் நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

டக்கெட் அபாரம்:

அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் தம்முடைய பங்கிற்கு நங்கூரமாக விளையாடினார். அந்த வகையில் ஆரம்பத்தில் நிதானத்தை காட்டிய இந்த ஜோடி மிடில் ஓவர்களில் ரன் குவிப்பின் வேகத்தை அதிகரித்தது. அதில் இருவருமே அரை சதம் கடந்த நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்கு 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரூட் 68 ரன்களை குவித்து அவுட்டானார்.

அடுத்ததாக வந்த ஹரி ப்ரூக் 3 ரன்னில் அவுட்டானார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து அதிரடி காட்டிய டக்கெட் சதத்தை அடித்து அசத்தினார். அவருடன் எதிர்புறம் அதிரடி காட்ட முயற்சித்த கேப்டன் ஜோஸ் பட்லர் 23 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதற்கடுத்ததாக வந்த லியாம் லிவிங்ஸ்டன் 14 ரன்களில் பெவிலியன் சென்றார்.

- Advertisement -

உலக சாதனை:

அப்போதும் இந்த பக்கம் தொடர்ந்து ஓயாமல் அசத்திய பென் டக்கெட் 150 ரன்கள் கடந்து 17 பௌண்டரி 3 சிக்ஸர்களை அடித்து 165 (143) ரன்கள் குவித்து ஒரு வழியாக பெவிலியன் திரும்பினார். இதன் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபியில் 150 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அத்துடன் சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: அவங்கதான் ஜெயிக்கனும்.. அப்போ தான் இந்த சாம்பியன்ஸ் டிராபி நல்லா இருக்கும் – முன்னாள் இந்திய வீரர் வித்தியாசமான கருத்து

இதற்கு முன் ஜிம்பாப்வேவின் ஆண்டி பிளவர், நியூஸிலாந்தின் நாதன் அஸ்லே தலா 145 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் 21* (10) ரன்கள் எடுத்ததால் 50 ஓவரில் இங்கிலாந்து 351-8 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன் 2004இல் அமெரிக்காவுக்கு எதிராக லண்டனில் நியூசிலாந்து 347-4 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -