IND vs ENG : மாஸ் வெற்றி, இங்கிலாந்து 2 புதிய வரலாற்று சாதனை – அவமான தோல்வியால் இந்தியா 2 பரிதாப சாதனை

- Advertisement -

கடந்த வருடம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கியது. பர்மிங்காம் நகரில் தொடங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா போராடி தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் சேர்த்தது.

புஜாரா, விஹாரி, விராட் கோலி என முக்கிய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 98/5 என மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியா 200 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மொத்தமாக மீட்டெடுத்தார்கள்.

- Advertisement -

அதில் டி20 இன்னிங்ஸ் போல அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்து 146 (111) ரன்களும் அவருடன் பொறுமையாக விளையாடிய ஜடேஜா சதமடித்து 104 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்டு பும்ரா உலக சாதனை படைக்க இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்தியா சொதப்பல்:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து துல்லியமான இந்தியாவின் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெறும் 284 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிக பட்சமாக சதமடித்த ஜானி பேர்ஸ்டோ 104 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் கில் 4, விஹாரி 11, ஷ்ரேயஸ் ஐயர் 19, விராட் கோலி 20 என முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் பொறுப்பை காட்டாமல் 2-வது வாய்ப்பிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டதால் இந்தியா வெறும் 245 ரன்களுக்கு சுருண்டது. அந்த அளவுக்கு தரமாக பந்துவீசிய இங்கிலாந்துக்கு எதிராக பொறுப்புடன் பேட்டிங் செய்த புஜாரா 66 ரன்களும் நிதானத்தை காட்டிய ரிஷப் பண்ட் 57 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இறுதியில் 378 என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து தொடக்க வீரர்களின் அதிரடியால் 107 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் பெற்று அபார தொடக்கம் பெற்றது. அப்போது லீஸ் 56, கிராவ்லி 46, போப் 0 என 3 வீரர்களை அடுத்தடுத்து அவுட் செய்த இந்தியா வெற்றிக்காக போராடினாலும் அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ நங்கூரத்தை போட்டு நிதானமாக பேட்டிங் செய்ததால் 4-வது நாளிலேயே இந்தியாவின் வெற்றி பறிபோனது.

- Advertisement -

வரலாற்று சாதனை:
அந்த நிலைமையில் இன்று துவங்கிய கடைசி நாளில் வெற்றிக்கு 100 ஓவரில் 119 ரன்கள் தேவைப்பட்ட போது தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த ஜோ ரூட் சதமடித்து 142* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ தனது பங்கிற்கு சதமடித்து 114* ரன்கள் எடுத்து அபார பினிசிங் கொடுத்தனர். அதனால் 378/3 ரன்களை எடுத்த இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் நாங்கள் எப்போதுமே ராஜாதான் என்று இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

1. அதுவும் முதல் இன்னிங்சில் வெறும் 284 ரன்களுக்கு சுருண்டு 132 ரன்கள் பின்தங்கிய போதிலும் கடைசி 2 நாட்களில் பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்ட அந்த அணி பேட்டிங்கில் அதைவிட அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அதைவிட இப்போட்டியில் 378 ரன்களை வெற்றிகரமாக துரத்திய இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. அந்தப் பட்டியல் இதோ:
1. 378 ரன்கள் – இந்தியாவுக்கு எதிராக பர்மிங்காம், 2022*
2. 358 ரன்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, லீட்ஸ், 2019

- Advertisement -

2. அதேபோல் இப்போட்டி நடைபெற்ற பர்மிங்காம் மைதானத்தில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற வரலாற்றுச் சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது. அந்த பட்டியல் இதோ:
1. 378 ரன்கள் – இங்கிலாந்து, இந்தியாவுக்கு எதிராக, 2022
2. 281 ரன்கள் – தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக, 2008
3. 208 ரன்கள் – நியூசிலாந்துக்கு எதிராக, இங்கிலாந்து, 1999

3. அதைவிட வரலாற்றிலேயே முதல் முறையாக 350க்கும் மேற்பட்ட இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா அவமானமான தோல்வியை இப்போட்டியில் சந்தித்துள்ளது. ஆம் இதற்கு முன் 350க்கும் மேற்பட்ட ரன்களை கட்டுப்படுத்திய 37 போட்டிகளில் வென்ற இந்தியா 15 போட்டிகளில் டிரா செய்திருந்த நிலையில் முதல் முறையாக இப்போது தோல்வியை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : தோனியை பிரதிபலித்த இளம் வீராங்கனை, மகளிர் கிரிக்கெட்டில் ப்ரம்மாண்ட உலகசாதனை படைத்த இந்தியா

4. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற வரலாற்றையும் இங்கிலாந்து படைத்துள்ளது. அந்தப் பட்டியல் இதோ:
1. 378 ரன்கள் – இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி, பர்மிங்காம், 2022
2. 339 ரன்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி, பெர்த், 1997
3. 276 ரன்கள் – வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தோல்வி டெல்லி, 1987

Advertisement