கொரோனா எதிரொலி மேலும் ஒரு தொடர் ஒத்திவைப்பு: சொந்த நாடு திரும்புமாறு கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தல்

England
- Advertisement -

இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கை வந்திருந்தது. தற்போது நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதற்கிடையே கரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Aus vs Eng

- Advertisement -

சில ஐரோப்பிய நாடுகளில் இதனால் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவிலும் இதன் காரணமாக மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தள்ளி வைப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையில் உள்ள இங்கிலாந்து வீரர்கள் உடனடியாக நாடு திரும்பி வருமாறு அறிவுறுத்தி உள்ளது. இதனால் பயிற்சி போட்டி ரத்து செய்து விட்டு உடனடியாக இங்கிலாந்து செல்ல இங்கிலாந்து வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

england

ஏற்கனவே இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இலங்கை அணி வீரர்களுடன் கை குலுக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது இருக்கும் சூழ்நிலையில் போட்டியை விட வீரர்களின் உடல்நலம் மற்றும் அனைவரின் பாதுகாப்புமே முக்கியம் என்பதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த முடிவினை எடுத்துள்ளது. மேலும் இந்த நோயின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த கொரோனா பாதிப்பினால் இந்தியாவில் நடைபெற இருந்த மிகப்பெரிய தொடரான ஐ.பி.எல் தொடரும் ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement