மீண்டும் ஐ.பி.எல் தொடர் நடந்தால் எங்களது அணி வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் – போர்க்கொடி தூக்கிய நிர்வாகம்

Ipl cup
- Advertisement -

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது, தொடரில் பங்கேற்றிருந்த பல்வேறு வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாதால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 29 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள இத்தொடரில் இன்னும் 31 போட்டிகள் எஞ்சியுள்ளது. இந்த 31 போட்டிகளையும் செப்டம்பர் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் நடத்தி முடிக்க பிசிசிஐ ஏற்பாடு செய்யும் என்று எதிர்பார்கப்படுகிறது. இந்நிலையில் பாதியில் நின்றுபோன ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடைபெற்றால், அந்த தொடரில் இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார், இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனரான ஆஷ்லே கைல்ஸ். இதுபற்றி அவர் கூறியதாவது,

Buttler

பாதியில் நின்று போன ஐபிஎல் போட்டிகள் எங்கே எப்போது நடக்கும் என்று யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் அப்போட்டிகளை, செப்டம்பர் மாத இறுதியிலும் மற்றும் நவம்பர் மாத இடையிலும் நடத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் இந்த காலப்பகுதியல் நடைபெற்றால் இங்கிலாந்து வீரர்கள் யாரும் அத்தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அப்போது இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நாங்களும் எங்கள் வீரர்கள் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதையே விறும்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்து அணியானது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. அதற்குப் பிறகு டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கு பெறும் அந்த அணி, அதை முடித்துவிட்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசி ஆஸ்லே கைல்ஸ்,

bairstow

நாங்கள் இங்கிலாந்து அணி பங்கு பெற இருக்கும் சர்வதேச போட்டிகளின் அட்டவணையை ஏற்கனவே தயார் செய்துவிட்டோம். அதன்படி நாங்கள் அந்த தொடர்களில் எங்கள் நாட்டு வீரர்களை ஈடுபடுத்த உள்ளோம். மேலும் அணியில் சில புது வீரர்களின் வரவும் இருக்கும். டி20 உலக கோப்பை மற்றும் எதிர்வரும் ஆஷஸ் தொடரை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவிற்கு நாங்கள் வந்துள்ளோம். ஏற்கனவே ஜனவரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நியூசிலாந்து தொடரும் தள்ளிப்போய், இப்போது தான் நடைபெற இருக்கிறது. அதுபோல் இந்த கோவிட் சூழ்நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பது முன்கூட்டியே கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த ஐபிஎல் தொடரில் விளையாடும் எட்டு அணிகளில் மொத்தம் பதினோரு இங்கிலாந்து வீரர்கள் பங்கு பெற்றிருக்கின்றனர். அதில் முக்கியமாக சென்னை அணியில் சாம் கரன் மற்றும் மொயீன் அலி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அந்த அணிகளின் முக்கிய வீரர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement