ஆஷஸ் டெஸ்ட் : இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட பரிதாபம் – அதுக்குன்னு இப்படியா?

Aus
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

Richardson

- Advertisement -

அதன்பிறகு கடந்த 16ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 473 ரன்களை குவிக்க இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களை மட்டுமே குவித்தது.

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 230 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 468 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 200 ரன்கள் கூட எடுக்க முடியாமல் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துது.

starc

இதன் காரணமாக 275 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி மீண்டும் ஒருமுறை படு மோசமான தோல்வியை சந்தித்தது. இப்படி அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றியின் மூலம் தற்போது ஆஸ்திரேலிய அணியானது இந்த ஆஷஸ் தொடரில் 2 க்கு 0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : பாக்சிங் டே டெஸ்ட் : ஹனுமா விஹாரிக்கு இடம் கிடைக்குமா? கிடைக்காதா? – விவரம் இதோ

இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட ஆஷஸ் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதனால் ஆஸ்திரேலிய அணி தற்போது மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement