2வது போட்டி முடிந்ததும்.. அவசரமாக இந்தியாவை விட்டு வெளியேறிய இங்கிலாந்து அணியினர்.. காரணம் என்ன?

IND vs ENG Test
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்று வரும் இத்தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. குறிப்பாக 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்தியாவை கடைசி நேரத்தில் தோற்கடித்த அந்த அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

மறுபுறம் சொந்த மண்ணில் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்ட இந்தியா அதற்காக மனம் தளராமல் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் சொந்த மண்ணில் அவ்வளவு எளிதாக எங்களை வீழ்த்த முடியாது என்பதை நிரூபித்துள்ள இந்தியா 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியுள்ளது.

- Advertisement -

கிளம்பிய இங்கிலாந்து:
ஆனால் 600 ரன்கள் இலக்காக இருந்தாலும் அடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்து கடைசியில் 399 ரன்கள் வெற்றிகரமாக சேசிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நிறைவு பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை முடித்துக் கொண்டு பிப்ரவரி 5ஆம் தேதி மாலையே இங்கிலாந்து அணியினர் அபுதாபிக்கு அவசரமாக புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

குறிப்பாக இத்தொடரின் மூன்றாவது போட்டி இன்னும் 10 நாட்கள் கழித்து தான் ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது. எனவே தற்காலிகமாக இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ள இங்கிலாந்து அணியினர் அபுதாபிக்கு சென்று அங்கு ஒரு வாரம் பயிற்சி முகாமில் ஈடுபட்டு புத்துணர்ச்சியுடன் பயிற்சிகளை எடுக்க உள்ளனர். சொல்லப்போனால் இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாகவே முதலில் அபுதாபிக்கு சென்ற இங்கிலாந்து அணியினர் அங்கு 2 – 3 வாரங்கள் பயிற்சிகளை எடுத்த பின்பே இந்தியாவுக்கு வந்தனர்.

- Advertisement -

அந்த பயிற்சிகளின் உதவியால் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து சொந்த மண்ணில் இந்தியாவை தோற்கடித்தது. அந்த வரிசையில் 10 நாட்கள் இடைவெளி இருப்பதால் அதை பயன்படுத்தி அபுதாபிக்கு சென்று ஸ்பெஷல் பயிற்சிகளை எடுக்க உள்ள இங்கிலாந்து அணியினர் மூன்றாவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான படையை தோற்கடிப்பதற்கான புத்துணர்ச்சியுடன் மீண்டும் அடுத்த வாரம் இந்தியா வர உள்ளனர்.

இதையும் படிங்க: கொஞ்சம் பொதறிவை யூஸ் பண்ணுங்க.. 2வது டெஸ்ட் தோல்வியால் ஸ்டோக்ஸ் – மெக்கல்லமை வெளுத்த ஜெஃப்ரி பாய்காட்

ஆனால் அதை சமாளிப்பதற்கு இந்திய அணி தங்களுடைய சொந்த மண்ணிலேயே தேவையான பயிற்சிகளை எடுக்க உள்ளது. அந்த போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்க உள்ளது. அதில் விராட் கோலி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement