இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து 21ஆம் நூற்றாண்டில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.
அந்த 2 போட்டிகளிலும் பெரிய இலக்கை சேசிங் செய்த இங்கிலாந்து சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடாமல் அதிரடியாக விளையாட முயற்சித்து தோல்வியை சந்தித்தது. எனவே பஸ்பால் எனப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல விளையாட நினைக்கும் இங்கிலாந்து அணியின் அதிரடியான அணுகுமுறை அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஓவர் ஆக்ட்டிங் வேண்டாம்:
இந்நிலையில் பஸ்பால் அணுகு முறையை பின்பற்றி கடந்த காலங்களில் நிறைய வெற்றிகளை பெற்ற போது அதை கொண்டாடிய இங்கிலாந்து ரசிகர்கள் தற்போது இந்தியாவுக்கு எதிராக 2 தோல்விகளை சந்தித்ததும் ஓவர் ஆக்டிங் செய்து விமர்சிப்பதாக முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே நம்முடைய அணிக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும் என இங்கிலாந்து ரசிகர்களை கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“ஆங்கிலேயர்களான நாம் இந்த தோல்விகளுக்காக ஓவர் ஆக்டிங் செய்கிறோம். இங்கிலாந்து விளையாடும் விதத்தில் நான் அதிக நம்பிக்கை கொண்டவன். அதை நீங்கள் பஸ்பால் அல்லது எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் கடந்த சில வருடங்களாக நாம் அந்த அணுகு முறையை பின்பற்றி நிறைய டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ளோம். எனவே சில தோல்விகளை சந்தித்ததால் மட்டும் அது மோசமானதாக மாறிவிடாது”
“மூன்றாவது டெஸ்ட் போட்டி சொதப்பலாக முடிந்தது. இந்த நேரத்தில் நான் பென் ஸ்டோக்ஸுடன் உள்ளேன். அவர் இது தான் எங்களுடைய பிராண்ட். இது அனைத்து நேரங்களிலும் வேலை செய்யாது. ஆனால் இதை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி விளையாடுவோம் என்று கூறியுள்ளார். எனவே அந்த அணுகுமுறையை பின்பற்றி பென் டக்கெட் அடித்த அபாரமான சதத்தை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: அது என்னோட கனவு.. தோனியின் ஊரில் அந்த வாய்ப்பு கிடைக்கும்ன்னு நம்புறேன்.. துருவ் ஜுரேல் பேட்டி
“10 வருடங்களுக்கு முன்பாக இப்படி விளையாடியில்ருந்தால் அவர் ஊரை விட்டு துரத்தப்பட்டிருப்பார். எனவே சில தோல்விகளுக்காக நாம் மோசமாக ஓவர் ரியாக்சன் செய்கிறோம் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். முன்னதாக அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தாலும் கடைசி 2 போட்டியில் வென்று இப்போதும் நாங்கள் இந்தியாவில் வீழ்த்துவோம் என்று பென் ஸ்டோக்ஸ் 3வது போட்டியின் முடிவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.