IND vs ENG : விராட் கோலியை விமர்சித்த இங்கிலாந்து வாரியம் – இணையத்தில் வெளுத்து வாங்கிய ரசிகர்கள். என்ன நடந்தது?

Ben Stokes Jasprit Bumrah ENG vs IND
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பரிதாபமாக தோற்றது. கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காமில் துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 416 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 104 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து பும்ரா உள்ளிட்ட இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அவமான தோல்வி:
அதனால் 132 ரன்களை முன்னிலையாக பெற்ற இந்தியா 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2-வது இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக புஜாரா 66 ரன்களும் பண்ட் 57 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 378 ரன்களை துரத்திய இங்கிலாந்து தொடக்க வீரர்களின் அதிரடியால் 107/0 என்ற அபார தொடக்கத்தைப் பெற்று அச்சுறுத்தியபோது அடுத்தடுத்த 3 விக்கெட்டுகள் எடுத்த இந்தியா பதிலடி கொடுத்தது.

ஆனால் அடுத்ததாக களமிறங்கி வெறித்தனமாக பேட்டிங் செய்த ஜோ ரூட் சதமடித்து 142* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 114* ரன்கள் எடுத்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து வரலாறு படைத்த இங்கிலாந்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. மறுபுறம் வரலாற்றில் 100 ரன்களை முன்னிலையாக பெற்று 350க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயித்த எந்த போட்டியிலும் தோல்வியடையாத இந்தியா முதல் முறையாக இப்போட்டியில் மண்ணை கவ்வி அவமானத்தைச் சந்தித்தது.

- Advertisement -

நகரீகமில்லா இங்கிலாந்து:
இப்போட்டியை டிரா செய்திருந்தால் கூட குறைந்தபட்சம் 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றிருக்கலாம் என்ற நிலைமையில் படுதோல்வியடைந்த இந்தியா 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது. குறிப்பாக முதல் 3 நாட்களில் இந்தியாவின் கை ஓங்கியிருந்ததால் சமூக வலைதளங்களில் காலரை தூக்கிவிட்டு வந்த இந்திய ரசிகர்கள் கடைசி 2 நாட்களில் சுமாராக செயல்பட்டதால் தலைகுனிவை சந்தித்துள்ளனர். அதனால் இந்திய ரசிகர்களை தற்போது இங்கிலாந்து ரசிகர்கள் வெறித்தனமாக கலாய்த்து வருகிறார்கள்.

குறிப்பாக முதல் இன்னிங்சில் மெதுவாக பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலைமையில் விராட் கோலி ஸ்லெட்ஜிங் செய்ததால் தீயாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 106, 114* என 2 இன்னிங்சிலும் சதமடித்து இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆனால் 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் திணறும் விராட் கோலி வாயில் பேசியதை செயலில் காட்டத்தவறினார்.

- Advertisement -

அதனால் கடந்த 18 மாதங்களில் எடுத்த ரன்களை விட கடந்த 25 நாட்களில் ஜானி பேர்ஸ்டோ எடுத்த ரன்கள் அதிகம் என்று விராட் கோலியை இங்கிலாந்தின் அதிகாரபூர்வ ரசிகர்கள் பக்கமான பார்மி ஆர்மி ட்வீட்டரில் கலாய்த்துள்ளது. அவர்களாவது பரவாயில்லை ரசிகர்கள் என்று விடலாம். ஆனால் இங்கிலாந்து வாரியத்தின் அதிகாரப்பூர்வ பக்கமே “வாயை ஜிப் போட்டு மூடிக்கொள்ளுங்கள்” என்ற அர்த்தத்தில் விராட் கோலியை விமர்சித்துள்ளது.

காயம்பட்டாலும் சிங்கமே:
அதை பார்த்த இந்திய ரசிகர்கள் காயம்பட்டாலும் நாங்கள் எப்போதுமே சிங்கம் தான் என்று பதிலடி கொடுக்கின்றனர்.
1. முதலில் சர்வதேச அரங்கில் விராட் கோலி 70 சதங்களை அடித்துள்ளார். தற்போதைய இங்கிலாந்து டெஸ்ட் அணியில் உள்ள மொத்த வீரர்களும் சேர்ந்து 55 சதங்கள் மட்டுமே அடித்துள்ளதாக இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

- Advertisement -

2. அதேபோல் சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த தொடரை 2 – 2 என்ற கணக்கில் இங்கிலாந்து சமன் மட்டுமே செய்ததே தவிர தன்னிச்சையாக வெல்லவில்லை. ஆனால் என்னமோ தொடரை முழுமையாக வென்றதை போல் பீத்திக்கொள்ளும் இங்கிலாந்தின் சார்பாக வேண்டுமென்றே வம்புக்கு வந்த மைக்கேல் வாகனை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

3. இதுபோக விராட் கோலி எடுத்த மொத்த ரன்களை 2 ஜானி பேர்ஸ்டோ வந்தால் கூட ஈடு செய்ய முடியாது என கூறும் ரசிகர்கள் எங்களின் எம்எஸ் தோனி மட்டுமே 3 ஐசிசி உலகக் கோப்பைகளை வென்றுள்ளதாக கூறுகிறார்கள்.

இதையும் படிங்க : இனி இவருக்கு ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடையாதா? சத்தமில்லாமல் ஓரங்கட்டப்பட்ட – சீனியர் வீரர்

ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்து விட்டு இங்கிலாந்து ரத்தத்தை கொண்டவரால் உலக கோப்பையை வெல்ல முடியாமல் அயர்லாந்தில் பிறந்தவரை கூட்டிவந்து நியூசிலாந்து ஏமாற்றி வென்ற உங்களுக்கு இவ்வளவு கர்வம் என்றால் உழைத்து கோப்பையை வென்றுள்ள எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று இந்திய ரசிகர்கள் மாஸ் பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement