இனி இவருக்கு ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடையாதா? சத்தமில்லாமல் ஓரங்கட்டப்பட்ட – சீனியர் வீரர்

Bhuvi
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் தற்போது நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரினை அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்களின் பட்டியலை பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தின் மூலம் தற்போது வெளியிட்டுள்ளது.

IND Team

- Advertisement -

அதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உட்பட 7 சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் புதிய கேப்டனாக ஷிகார் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு அவரது தலைமையில் 16 பேர் கொண்ட இளம் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இந்திய அணியில் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சீனியர் வீரர் ஒருவர் கழட்டிவிடப்பட்டுள்ளார்.

அதனால் ஒருநாள் போட்டிகளில் இனி அவருக்கு வாய்ப்பே கிடைக்காதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதன்படி இந்திய அணியின் சீனியர் பவுலரான புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்காக கடந்த 2012-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இதுவரை 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் சமீப காலமாகவே ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓரம் கட்டப்பட்டு வருகிறார்.

Bhuvi 2

குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாத அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கான ஒருநாள் அணியிலும் இடம் பெறாததால் இந்திய நிர்வாகம் அவரை ஒருநாள் போட்டிகளில் இருந்து புறக்கணிக்கிறது என்பது தெளிவாக தெரிந்துள்ளது.

- Advertisement -

அதோடு டி20 கிரிக்கெட்டில் முன்னணி வீரராக செயல்பட்டு வரும் அவரை இனி ஒரு டி20 ஸ்பெசலிஸ்ட்டாக மட்டுமே பார்த்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2018 ஆம் ஆண்டு புறக்கணிக்கப்பட்ட அவர் அதற்கு பிறகு வாய்ப்பினை பெறவில்லை. அதேபோன்று தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் புறக்கணிக்கப்பட்டு வருவதால் மீண்டும் அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பே கிடைக்காதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : IND vs WI : வெ.இ அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் உட்பட ஓய்வளிக்கப்பட்ட 7 சீனியர் வீரர்களின் – லிஸ்ட் இதோ

ஆனாலும் இதுவரை இந்திய அணிக்காக 66 t20 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால் டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் முன்னணி பவுலராக செயல்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement