10க்கு 9.. இந்தியாவின் மோசமான உலக சாதனையை வாங்கிக்கொண்ட இங்கிலாந்து.. 1982 முதல் தொடரும் பரிதாபம்

IND vs ENG
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரில் 4 – 1 (5) என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா தங்களை உலகச் சாம்பியன் என்பதை நிரூபித்தது. அடுத்ததாக 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா கட்டாக் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்தை தோற்கடித்தது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இந்திய அணி ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. அதனால் தங்களது சொந்த மண்ணில் இந்தியா வலுவான அணி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

திணறும் இங்கிலாந்து:

மறுபுறம் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே தலைமையில் ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் பஸ்பால் எனப்படும் அதிரடியான அணுகுமுறையை பின்பற்றி விளையாடி வருகிறது. ஆனால் அந்த அணுகுமுறையை பின்பற்றியும் அந்த அணியால் 2024 மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெற்றி பெற முடியவில்லை. 4 – 1 (5) என்ற கணக்கில் அத்தொடரில் தோற்ற இங்கிலாந்து தற்போது டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் இந்தியாவை வீழ்த்த முடியவில்லை.

ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக 1982ஆம் ஆண்டு இந்தியாவை 2 – 1 (3) என்ற கணக்கில் அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து தோற்கடித்தது. அதன் பின் கடந்த 23 வருடங்களாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து திணறி வருகிறது. அதே போல கடந்த 10 வருடங்களில் நடைபெற்ற 10 வெள்ளைப் பந்து தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து 9வது தோல்வியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

மோசமான உலக சாதனை:

இவை அனைத்தையும் விட ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 99 முறை 300க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளது. அந்த 99 போட்டிகளில் கட்டாக் போட்டியையும் சேர்த்து இங்கிலாந்து 28வது தோல்வியை பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடித்தும் அதிக தோல்வியை சந்தித்த அணி என்ற இந்தியாவின் உலக சாதனையை இங்கிலாந்து தற்போது தங்கள் பெயரில் எழுதிக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: ரோஹித் ஃபார்முக்கு வந்தது இந்தியாவுக்கு பலம்.. 2 வருடமானாலும் நான் அசத்த இதான் காரணம்.. ஜடேஜா பேட்டி

இதற்கு முன் 300 ரன்கள் அடித்த 136 போட்டிகளில் இந்தியா 27 முறை தோல்வியை சந்தித்ததே முந்தைய சாதனை. அதேப் பட்டியலில் 62 போட்டிகளில் 23 தோல்விகளை சந்தித்து வெஸ்ட் இண்டீஸ் 3வது இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து கடைசி போட்டியிலாவது ஆறுதல் வெற்றியைப் பெற இங்கிலாந்து முயற்சிக்க உள்ளது.

Advertisement