கத்துக்குட்டியான நெதர்லாந்தை கதறகதற வதம் செய்த இங்கிலாந்து – சொந்த சாதனையை உடைத்து இரட்டை உலகசாதனை

NED vs ENG Buttler
- Advertisement -

நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. வரலாற்றில் இவ்விரு அணிகளும் இருதரப்பு தொடரில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறை என்ற நிலைமையில் 2019 உலக கோப்பையை வென்று கிரிக்கெட்டின் சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து இந்த தொடரில் எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நிலைமையில் ஜூன் 17இல் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு தொடக்க வீரர் ஜேசன் ராய் 1 (7) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.

ஆனால் அடுத்து களமிறங்கிய டேவிட் மாலன் மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால்ட் உடன் இணைந்து நெதர்லாந்து பவுலர்களை நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் எதிர்கொண்டார். பவர்பிளே ஓவர்கள் முடிந்தும் பட்டைய கிளப்பிய இந்த ஜோடியில் இருவருமே அரைசதம் கடந்தும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடம்பிடித்து நெதர்லாந்தை வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

கதற கதற:
2-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் 30-வது ஓவர் வரை அந்த அணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்தை வலுப்படுத்தினார்கள். ஒரு கட்டத்தில் இந்த இருவருமே சதமடித்து நெதர்லாந்தை வெளுத்து வாங்கிய பின் 14 பவுண்டரி 3 சிக்சருடன் 122 (93) ரன்கள் எடுத்த பிலிப் சால்ட் தனது முதல் சதமடித்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் சால்ட் – மாலன் ஜோடியை விட இருமடங்கு அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்த நெதர்லாந்தை வதம் செய்ய துவங்கினார்.

ஐபிஎல் 2022 தொடரில் 863 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் அவர் நெதர்லாந்து எப்படி பந்து வீசினாலும் பவுண்டரியாக பறக்கவிட்டார். 3-வது விக்கெட்டுக்கு மீண்டும் 184 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து நெதர்லாந்தை கதற கதற அடித்த இந்த ஜோடியில் மெதுவாக பேட்டிங் செய்து கொண்டிருந்த டேவிட் மாலன் 9 பவுண்டரி 3 சிக்சருடன் ஒருவழியாக 125 (109) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய கேப்டன் மோர்கன் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

இங்கிலாந்தின் வதம்:
அதனால் 400 ரன்களை கடந்த இங்கிலாந்து அதோடு நிறுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்த்த நெதர்லாந்துக்கு கடைசி நேரத்தில் அடுத்து களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டனுடன் ஜோடி சேர்ந்த பட்லர் கொஞ்சம் கூட கருணை காட்டாமல் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்தார்.

அதில் சதம் கடந்த பட்லர் கடைசி வரை அவுட்டாகாமல் 7 பவுண்டரி 14 சிக்சருடன் 162* (70) ரன்களை 231.43 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்க விட அவரை விட இருமடங்கு அதிரடி காட்டிய லியம் லிவிங்ஸ்டன் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 66* (22) ரன்களை 300.00 என்ற முரட்டுத்தனம் ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்தார். அதற்குள் 50 அவர்கள் முடிந்துவிட்டது இல்லையேல் 500 ரன்களை தொட்டிருப்போம் என்ற வகையில் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழந்த இங்கிலாந்து 498 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

2 உலகசாதனை:
1. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக ஏற்கனவே படைத்திருந்த உலக சாதனையை முறியடித்த இங்கிலாந்து புதிய சாதனை சாதனை படைத்தது. அந்தப் பட்டியல் இதோ:
1. 498/4 – இங்கிலாந்து, நெதர்லாந்துக்கு எதிராக
2. 481/6 – இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
3. 444/3 – இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக
4. 443/9 – இலங்கை, நெதர்லாந்துக்கு எதிராக

2. அத்துடன் மொத்தமாக 26 சிக்சர்களை பறக்க விட்ட அந்த அணி ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த அணியாக தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தது. அந்த பட்டியல்:
1. 26 – இங்கிலாந்து, நெதர்லாந்துக்கு எதிராக
2. 25 – இங்கிலாந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக
3. 24 – வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக
4. 23 – வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்துக்கு எதிராக

3. அத்துடன் பவுண்டரிகளின் வாயிலாக மட்டுமே 300 ரன்களை அடித்த முதல் அணி என்ற உலக சாதனையும் இங்கிலாந்து படைத்தது.

இங்கிலாந்து மாஸ்:
அதை தொடர்ந்து 499 என்ற மலை போன்ற இலக்கை துரத்திய நெதர்லாந்து சொந்த மண்ணில் முடிந்த அளவுக்கு எவ்வளவோ போராடிய போதிலும் 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக மேக்ஸ் தாவுத் 55 (55) ரன்களும் எட்வர்ட்ஸ் 72* (56) ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மொய்ன் அலி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 232 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2-வது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement