இதைவிட சிறப்பான யார்க்கர் பந்தினை யாராலும் பந்துவீச முடியாது. ஸ்டம்ப்கள் பறக்க – வைரலாகும் வீடியோ

Yorker

சர்வதேச கிரிக்கெட்டில் பல முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது அபாரமான யார்க்கர் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக சரியான வேகத்தில் ஸ்டம்புகளை சாய்க்கும் பல பவுலர்களை நாம் கண்டுள்ளோம். அதிலும் குறிப்பாக சிறப்பான வேகத்தில் பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணற வைத்துள்ளார்கள்.

eng 1

அப்படி சர்வதேச பந்து வீச்சாளர்களுக்கு இணையாக இங்கிலாந்து கவுண்டி அணியான யார்க்ஷயர் அணியை சேர்ந்த மேத்யூ ஃபிஷர் என்ற மித வேகப்பந்து வீச்சாளர் ஸ்லோ இன்ஸ்விங் யார்க்கர் பந்தினை வீசினார். அந்த பந்து மித வேகப்பந்து வீச்சு என்றாலும் அதனை தடுக்க முடியாமல் பேட்ஸ்மென் கீழே விழ சரியாக அந்த பந்து மூன்றில் இரண்டு ஸ்டம்புகளை பறக்க விட்டனர்.

இந்த பந்தினை கவுண்டி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளது. சர்வதேச போட்டிகளில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் அசுர வேகத்தில் பந்து வீசியுள்ளனர். தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் மித வேகப்பந்து வீசி இப்படி ஒரு விக்கெட்டை வீழ்த்திய இவரது இந்த பந்துவீச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் இதை விட சிறப்பான யார்க்கர் பந்தினை வீச முடியாது என்றும் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்திலேயே இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -