இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் 2வது போட்டி மான்செஸ்டர் நடைபெற்றது. செப்டம்பர் 12ஆம் தேதி இதே நேரப்படி இரவு 11.00 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு துவக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து வெளுத்து வாங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் தம்முடைய பங்கிற்கு தென்னாப்பிரிக்க பவுலர்களை புரட்டி எடுத்தார். நேரம் செல்ல செல்ல இரு மடங்கு வேகத்தில் தென்னாப்பிரிக்காவை அடித்து நொறுக்கி அந்த ஜோடி வெறும் 7.5 ஓவரில் 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்துக்கு மிரட்டலான துவக்கத்தைக் கொடுத்தது.
இங்கிலாந்து வரலாற்று சாதனை:
அப்போது ஜோஸ் பட்லர் 8 பவுண்டரி 7 சிக்ஸருடன் 83 (30) ரன்களை 276.67 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அவுட்டானார். மறுபுறம் தம்முடைய பங்கிற்கு தென்னாப்பிரிக்காவை வெளுத்து வாங்கிய சால்ட் சதத்தை அடித்து அசத்தினார். இந்தப் பக்கம் வந்த ஜேக்கப் பெத்தல் சுமாராக பவுலிங் செய்த தென்னாப்பிரிக்காவை அடித்து 26 (14) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த கேப்டன் ஹாரி ப்ரூக் கடைசி நேரத்தில் பட்டாசாக விளையாடி 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 41* (21) ரன்களை விளாசினார். மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் 15 பவுண்டரி 8 சிக்சர்களைப் பறக்க விட்ட சால்ட் 141* (60) ரன்களை 235 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து ஃபினிஷிங் செய்தார். அதனால் 20 இங்கிலாந்து 304/2 ரன்கள் குவித்து மிரட்டியது.
மிகப்பெரிய வெற்றி:
இதன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களை அடித்த முதல் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணி என்ற வரலாற்று உலக சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த முழு உறுப்பு நாட்டு அணி என்ற உலக சாதனையும் இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன் 2024 ஹைதராபாத் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா 297 ரன்கள் அடித்ததே முந்தைய உலக சாதனை.
அந்தளவுக்கு மோசமாக பவுலிங் செய்த தென்னாப்பிரிக்காவுக்கு போர்ட்சுன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை சிறப்பாக பவுலிங் செய்த இங்கிலாந்து 16.1 ஓவரில் 158 ரன்களுக்கு சுருட்டி 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து தங்களுடைய மிகப்பெரிய சாதனை வெற்றியைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கம்பீரால் மட்டுமே நம்பர் ஒன் பவுலரை பெஞ்சில் விட முடியும்.. 2026 டி20 உ.கோ ஜெய்க்க அவர் வேணும்.. அஸ்வின் அதிருப்தி
இதற்கு முன் 2019 பெஸட்ரீ டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 137 ரன்கள் வித்யாசத்தில் வென்றதே இங்கிலாந்தின் முந்தைய பெரிய வெற்றி. அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அந்த அணிக்கில் அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 3, ஷாம் கரண் 2, லியம் டாசன் 2, வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய சாதனை தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேப்டன் மார்க்ரம் 41 ரன்கள் எடுத்தார்.



