இங்கிலாந்துல மட்டுமில்ல பாகிஸ்தானிலும் அவங்களோட அந்த ட்ரிக் ஒர்க் ஆயிருக்கு – அசத்திய இங்கிலாந்து

Ben Stokes
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி ராவில்பின்டி நகரில் டிசம்பர் 1ஆம் தேதியன்று துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து உலகத்தரம் வாய்ந்த பவுலர்ளை கொண்ட அணியாக கருப்படும் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி 657 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 122, பென் டன்கட் 107, ஹரி ப்ரூக் 153, ஓலி போப் 108 என முக்கிய வீரர்கள் அதிரடியாக ரன்களை குவித்தனர்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் ஆமை வேகத்தில் விளையாடினாலும் 579 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அசாத் சபிக் 114, இமாம்-உல்-ஹக் 121, கேப்டன் பாபர் அசாம் 136 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுத்தனர். அதை தொடர்ந்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து ஜோ ரூட் 73, ஹரி ப்ரூக் 87 என முக்கிய வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 264/7 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

பஸ்பால் உண்மை தான்:
ஏனெனில் தார் ரோடு போல இருந்த ராவல்பிண்டி பிட்ச்சில் வேறு எந்த அணியாக இருந்தாலும் முதல் இன்னிங்ஸில் 506 ரன்கள் குவித்து விட்டு இறுதியில் ஏன் ரிஸ்க் எடுத்து தோற்க வேண்டும் என்று 343 ரன்களுடன் டிக்ளேர் செய்திருக்க மாட்டார்கள். இருப்பினும் மேற்கொண்டு விளையாடினால் இப்போட்டி டிராவில் முடிவடைந்து விடும் என்று கருதிய இங்கிலாந்து சரியான நேரத்தில் தைரியமாக டிக்ளேர் செய்த நிலையில் 343 ரன்களை தார் ரோட் பிட்ச்சில் துரத்திய பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையுடன் விளையாடாமல் டிரா செய்தால் போதும் என்ற எண்ணத்துடன் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

அதை பயன்படுத்திய இங்கிலாந்து கடைசி நாளில் கடைசி ஒரு மணி நேரத்தில் 5 விக்கெட்டுகள் எஞ்சியிருந்தும் மனம் தளராமல் போராடி அற்புதமாக பந்து வீசி பாகிஸ்தானை 268 ரன்களுக்கு சுருட்டி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷகீல் 76, அசார் அலி 40 என முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்தாலும் வெற்றி பெறும் எண்ணத்துடன் விளையாடதால் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியால் 2000க்குப்பின் 22 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் ஒரு வெற்றியை பதிவு செய்ததற்கு முக்கிய நேரத்தில் தைரியமாக டிக்ளேர் செய்த இங்கிலாந்தின் முடிவு உலக அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

- Advertisement -

முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் ரொம்பவே தடுமாறிய அந்த அணி கடந்த ஜூலை மாதம் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது வருகைக்குப் பின் அதிரடியாக விளையாடும் அணுகு முறையை பின்பற்றி சொந்த மண்ணில் இந்தியா, நியூசிலாந்து போன்ற அணிகளை அடித்து நொறுக்கி மிரட்டியது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று இந்த உலகிற்கே கற்றுக் கொடுக்கப் போவதாக அவர்கள் தைரியமாக பேசியது அனைவரது கிண்டல்களுக்கு உள்ளானது. ஏனெனில் அடுத்த மாதமே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த அந்த அணியின் அதிரடி அணுகு முறை அனைத்து நேரங்களிலும் குறிப்பாக வெளிநாடுகளில் செல்லுபடியாகது என்று அனைவரும் விமர்சித்தார்கள்.

ஆனால் அதற்காக அசராமல் அதற்கடுத்த 2 போட்டிகளை வென்ற இங்கிலாந்து 2 – 1 (3) என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாராட்டுகளை பெற்றது. அந்த நிலையில் ராவல்பிண்டி பிட்ச் தார் ரோட் போல இருந்ததால் இப்போட்டி நிச்சயம் டிராவில் முடிவடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அதிலும் பாகிஸ்தானை விட அதிரடியாக விளையாடி தைரியமான முடிவை எடுத்து வெற்றி கண்ட இங்கிலாந்து தன்னுடைய அதிரடி அணுகு முறையால் வெளிநாட்டு மண்ணிலும் சாதித்து காட்டியுள்ளது.

இதையும் படிங்க : 2 கோடி அடிப்படை விலைக்கு கூட ஏலம் போக மாட்டார்கள் என்று சொல்லக்கூடிய 5 வெளிநாட்டு வீரர்கள் லிஸ்ட் இதோ

இதனால் “பஸ்பால்” எனப்படும் இங்கிலாந்தின் புதிய அணுகுமுறை உண்மை தான் என்று ஆரம்பத்தில் கலாய்த்த ரசிகர்கள் தற்போது மனதார பாராட்டுகிறார்கள். ஏனெனில் மெக்கல்லம் – ஸ்டோக்ஸ் தலைமையில் இதுவரை 8 போட்டிகளில் களமிறங்கிய இங்கிலாந்து 7 வெற்றிகளை பெற்றுள்ளது. 1 தோல்வி மட்டுமே சந்தித்துள்ளது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பஸ்பாஸ் புதிய பரிணாமத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது என்றே கூறலாம்.

Advertisement