- Advertisement -
உலக கிரிக்கெட்

5 விக்கெட்ஸ்.. 9க்கு 0.. இங்கிலாந்து வெற்றி.. வாயில் சொன்னதை செய்யாத இலங்கை.. 10 வருடமாக தொடரும் சோகம்

இலங்கைக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி மான்செஸ்டர் துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாராக விளையாடி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டீ சில்வா 74, மிலன் ரத்நாயகே 72 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிரிஸ், ஓக்ஸ் சோயம் பஷீர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆட்டத்தை வெளிப்படுத்தி 358 ரன்கள் அடித்து முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் சதமடித்து 111, ஹரி ப்ரூக் 56 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

இங்கிலாந்து வெற்றி:

இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னான்டோ 4,பிரபத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் பின் 122 ரன்களுடன் களமிறங்கிய இலங்கை 2வது இன்னிங்ஸில் முடிந்தளவுக்கு போராடியும் 326 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு மதுசங்கா 0, கருநரத்னே 27, குசால் மெண்டிஸ் 0, கேப்டன் டீ சில்வா 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் மிடில் ஆர்டரில் நிதானமாகவும் பொறுப்புடன் விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 65, தினேஷ் சன்டிமல் 79 ரன்கள் குவித்தனர். அவர்களை விட 7வது இடத்தில் களமிறங்கி அபாரமாக விளையாடிய கமிண்டு மெண்டிஸ் சதமடித்து 113 ரன்கள் குவித்து இலங்கையை ஓரளவு காப்பாற்றினார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஓக்ஸ் மற்றும் மேத்யூ போட்ஸ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

இறுதியில் 205 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு பென் டக்கெட் 11, கேப்டன் ஓலி போப் 6 ரன்களில் அவுட்டானாலும் பொறுப்புடன் விளையாடிய துவக்க வீரர் டான் லாரன்ஸ் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த ஹரி ப்ரூக் 32 ரன்கள் அடித்து ஜெயசூர்யா சுழலில் அவுட்டானார். இறுதியில் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 62* ரன்களும் ஜேமி ஸ்மித் 39 ரன்களும் கிறிஸ் ஓக்ஸ் 8* ரன்களும் எடுத்தனர்.

தொடரும் பரிதாபம்:

அதனால் 205/5 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதன் காரணமாக இலங்கைக்கு ஜெயசூர்யா மற்றும் அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதனால் பென் ஸ்டோக்ஸ் இல்லாததை பயன்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்துவோம் என்று கேப்டன் டீ சில்வா சொன்னதை செய்யாத இலங்கை அணி பரிதாபமாக தோற்றது.

இதையும் படிங்க: ரசிகர்களுக்காக நாங்க அடி வாங்கணுமா? அதை மாத்தலன்னா ஜெய்க்க முடியாது.. பாக் வாரியத்துக்கு நாசீம் கோரிக்கை

இதையும் சேர்த்து 2014க்குப்பின் இங்கிலாந்துக்கு எதிராக கடைசியாக விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை 1 ட்ரா 8 தோல்விகளை பதிவு செய்து வெற்றி பெற முடியாமல் திணறி வருகிறது. மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் இல்லாமலேயே வென்றது இங்கிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -