246 ரன்ஸ்.. வாயில் எச்சரித்த இங்கிலாந்து ஒருநாள் கூட தாங்காத பரிதாபம்.. முதல் நாளிலேயே முடித்த இந்தியா

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்கியது. ஹைதராபாத் நகரில் காலை 9.30 மணிக்கு துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் தாங்கள் இத்தொடரில் இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று மார்க் வுட் போன்ற இங்கிலாந்து வீரர்கள் ஆரம்பத்திலேயே எச்சரிக்கை விடுத்தனர். அந்த நிலையில் துவங்கிய இந்த போட்டியில் 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சவாலை கொடுத்த பென் டுக்கெட் 35 ரன்களில் அஸ்வின் சுழலில் அவுட்டானார்.

- Advertisement -

முடித்த பவுலர்கள்:
அடுத்ததாக வந்த ஓலி போப் 1 ரன்னில் ரவீந்திர ஜடேஜா சுழலில் அவுட்டாக மறுபுறம் சவாலை கொடுத்த மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லியை 20 ரன்களில் அஸ்வின் காலி செய்தார். அதனால் 60/3 என தடுமாறிய இங்கிலாந்தை 4வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் காப்பாற்ற முயற்சித்த ஜானி பேர்ஸ்டோ 37, ஜோ ரூட் 29 ரன்களில் அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா சுழலில் ஆட்டமிழந்தனர்.

அப்போது களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் பென் ஃபோக்ஸ் 4, ரெஹன் அஹமத் 13, டாம் ஹார்ட்லி 23, மார்க் வுட் 11 என எதிர்ப்புறம் வந்த வீரர்கள் முடிந்தளவுக்கு போராடியும் இந்திய பவுலர்களிடம் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் மறுபுறம் போராடிய ஸ்டோக்ஸ் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 70 ரன்களில் பும்ரா வேகத்தில் கிளீன் போல்டானார்.

- Advertisement -

அதனால் இங்கிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. மறுபுறம் அடித்து நொறுக்குவோம் என்று சவால் விட்ட இங்கிலாந்து அணியினரை இத்தொடரின் முதல் போட்டியின் முதல் நாளிலேயே ஆல் அவுட் அளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 3, ரவிச்சந்திரன் அஸ்வின் 3, ஜஸ்பிரித் பும்ரா 2, அக்சர் படேல் 2 விக்கெட்களை எடுத்தனர்.

இதையும் படிங்க: டாஸ் வென்று நாங்க முதலில் பேட்டிங் செய்த இதுதான் காரணம். டாசுக்கு பிறகு பேசிய – பென் ஸ்டோக்ஸ் சொன்னது என்ன?

குறிப்பாக ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்கள் தங்களுடைய தரத்திற்கு நிகராக பந்து வீசி இங்கிலாந்தை ஆல் அவுட் செய்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து இந்த போட்டியில் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி விரைவில் முன்னிலை பெறும் முனைப்புடன் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement