இங்கிலாந்து மக்களிடம் அசிங்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்.! எப்படி தெரியுமா..?

australiatroll
- Advertisement -

இங்கிலாந்திற்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டது. நேற்று (ஜூன் 13 ) இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை இங்கிலாந்து ரசிகர்கள் கேலி செய்யும் விதமாக ஒரு செயலை செய்துள்ளனர்.

australiaengland

- Advertisement -

கடந்த மார்ச் மாதம் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டின் டேவிட் வார்ணர் மற்றும் இளம் வீரர் கேமரூன் ஆகியோர் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர். இதனால் இவர்களை அணியில் இருந்து நீக்கியது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனான டிம் பைன் தலைமையில் நேற்று நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி ரசிகர்கள் கிண்டல் செய்யும் விதமாக மணர்த்துகள்கள் கொண்ட காகித அட்டைகளில் 4 மற்றும் 6 என்று எழுதி மைதானத்தில் கொண்டு வந்திருந்தனர்.

sandpaper
sandpaper

இதற்கு முக்கிய காரணம் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கய ஆஸ்திரேலிய அணி வீரர்கள், இந்த மணர்த்துகள்கள் கொண்ட காகித அட்டைகளை கொண்டு தான் பந்தை சேதப்படுத்தினர். அவர்களின் செயல்களை கிண்டல் செய்யும் வகையில் தான் இங்கிலாந்து வீரர்கள் அவர்கள் பயன்படுத்திய அதே காகித அட்டைகளில் இவ்வாறு எழுதி அதன் மூலம் அவர்களின் குற்றத்தை சுட்டி காட்டியுள்ளனர்.

Advertisement