மிகப்பெரிய பாதிப்பிற்கு பிறகு மீண்டும் துவங்க உள்ள முதல் கிரிக்கெட் தொடர் இதுதானாம் – அதிலும் இப்படி சிக்கலா ?

INDvsENG
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் சமூக தொற்றாக கொரோனா பரவுவதை தடுப்பதற்காக வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இந்தியாவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளும், கிரிக்கெட் போட்டிகள் என அனைத்துமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் தொடர்களும் ரத்தாகி உள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகளையும் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

- Advertisement -

இதுபோன்று இங்கிலாந்திலும் தொற்று காரணமாக இங்கிலாந்திலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் அடுத்த மாதம் அதாவது மே 28 வரை எந்தவிதமான விளையாட்டுப் போட்டிகளும் இங்கிலாந்தில் நடைபெற கூடாது என்று அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே மாதம் முழுவதும் எந்த ஒரு விளையாட்டு போட்டிகளும் இங்கிலாந்தில் நடைபெற வாய்ப்பில்லை.

அதன் பிறகு ஜூன் முதல் வாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால் ஜூன் மாதத்திலும் போட்டிகள் துவங்குவது என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில் இங்கிலாந்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

England

இதனகாரணமாக ஜூன் 4-ஆம் தேதி ஓவலில் நடைபெற இருந்த இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற குறைவான வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தலைவர் ஆஷ்லே ஜைல்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

மே 28 வரை போட்டிகள் நடைபெறாது என்ற அரசாங்க உத்தரவின்படி அப்படியே நாங்கள் பின்பற்றுகிறோம். அதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் மூன்றாம் தேதி கிரிக்கெட் தொடர் துவங்குவது வாய்ப்பு மிகவும் குறைவு தான். இதற்கான மாற்று வழிகளை நாங்கள் சிந்தித்து வருகிறோம். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் கிரிக்கெட்டை விட மக்களின் உடல்நிலையை முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

Eng

இருப்பினும் கிரிக்கெட் போட்டிகளை நாம் இழந்துவிடக்கூடாது என்பதற்காக தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். மற்ற நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளுடன் கலந்துரையாடி போட்டிகளை நடத்த வேண்டியது முக்கியமானது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜூன் மாதம் துவங்க இருந்த முதல் கிரிக்கெட் தொடரும் நடைபெறுவது சிக்கலாகியுள்ளது. தற்போது இருந்த=இருக்கும் நிலைமையை பார்த்தால் ஜூலை மாதத்திற்கு பின்னரே போட்டிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement