- Advertisement -
உலக கிரிக்கெட்

14 ஃபோர்ஸ் 4 சிக்ஸ்.. இலங்கையை துவம்சம் செய்த டெய்ல் எண்டர் பேட்ஸ்மேன்.. இங்கிலாந்துக்காக 55 வருட சாதனை

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு டான் லாரன்ஸ் 9, கேப்டன் ஓலி போப் 1, கிறிஸ் ஓக்ஸ் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதே போல பென் டக்கெட் 40, ஹரி ப்ரூக் 33, ஜேமி ஸ்மித் 21 ரன்னில் அவுட்டாகி சென்றனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 143 ரன்கள் குவித்து இங்கிலாந்தை வலுப்படுத்தினார். அவருடன் 8வது இடத்தில் களமிறங்கி சேர்ந்து விளையாடிய கஸ் அட்கின்ஷன் அரை சதமடித்து அசத்தினார்.

- Advertisement -

8வது இடத்தில் மிரட்டல்:

ஆனால் ஜோ ரூட் அவுட்டான பின் இங்கிலாந்து டெயில் எண்டர்களுடன் ஜோடி சேர்ந்த அவர் இலங்கைக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்தார். மறுபுறம் இலங்கை பவுலர்கள் மிகவும் சுமாராக பந்து வீசினார்கள். அதைப் பயன்படுத்தி இலங்கை பவுலர்களை ஒருநாள் கிரிக்கெட்டை போல விளையாடி துவம்சம் செய்த அட்கின்ஷன் சதமடித்து 14 பவுண்டரி 4 சிக்சருடன் 118 (115) ரன்களை 102.61 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார்.

அவருடன் மேத்தியூ போட்ஸ் 21, ஓலி ஸ்டோன் 15 ரன்கள் எடுத்ததால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 427 ரன்கள் குவித்து அசத்தியது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை தங்களது பவுலிங் போலவே பேட்டிங்கிலும் சுமாராக விளையாடி 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு மதுசங்கா, நிசாங்கா, கேப்டன் டீ சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் 25 ரன்கள் கூட தாண்டவில்லை.

- Advertisement -

இலங்கை திணறல்:

அதிகபட்சமாக தனி ஒருவனாக போராடிய கமிண்டு மெண்டிஸ் 74 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ஸ்டோன் 2, கிறிஸ் ஓக்ஸ் 2, மேத்தியூ போட்ஸ் 2, கஸ் அட்கின்ஷன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இறுதியில் 241 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் இங்கிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 25-1 ரன்களுடன் 256 ரன்களை முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது.

முன்னதாக கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் கஸ் அட்கின்ஷன் 8வது இடத்தில் களமிறங்கி அசத்தினார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு போட்டியில் 8வது இடத்தில் 44 வருடங்கள் கழித்து சதமடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 10 ஃபோர்ஸ்.. சேவாக் போல இங்கிலாந்தில் அசத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன்.. இந்திய வாய்ப்புக்காக தீயாக ஆட்டம்

அத்துடன் லார்ட்ஸ் மைதானத்தில் 55 வருடங்கள் கழித்து 8வது இடத்தில் களமிறங்கி சதமடித்த இங்கிலாந்து வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1969ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ரே இல்லிங்ஒர்த் 8வது இடத்தில் களமிறங்கி இங்கிலாந்துக்காக சதமடித்துள்ளார்.

- Advertisement -