ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் நான்காம் தேதி பார்படாஸ் நகரில் ஆறாவது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்சி மைக்கேல் – ஜோன்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.
அந்த வகையில் பவர் பிளே ஓவர்கள் கடந்து அசத்திய இந்த ஜோடியால் ஸ்காட்லாந்து நல்ல துவக்கத்தை பெற்றது. அப்போது மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 10 ஓவரின் முடிவில் ஸ்காட்லாந்து 90/0 ரன்கள் எடுத்த போது மீண்டும் வந்த மழை போட்டியை மொத்தமாக நிறுத்தியது.
இங்கிலாந்தின் பரிதாபம்:
அதைத் தொடர்ந்து மீண்டும் மழை நின்றதால் இங்கிலாந்து அணிக்கு 10 ஓவரில் 109 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்சி 41* (31), மைக்கேல் ஜோன்ஸ் 45* (30) ரன்கள் எடுத்து அசத்தினார்கள். ஆனால் அப்போது மீண்டும் மழை வந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த ஒரு அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்ய முடியாமல் இங்கிலாந்து பரிதாபத்தை சந்தித்தது. அதாவது 2009ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்த அந்த அணி 2010இல் அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
அதன் பின் 2014ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி 2022இல் அயர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் தற்போது ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக முதல் முறையாக விளையாடிய இந்த போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. அந்த வகையில் இதுவரை ஐரோப்பா நாடுகளுக்கு எதிராக விளையாடிய 5 போட்டிகளில் இங்கிலாந்து 3 தோல்விகளை சந்தித்தது. 2 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: அவங்களுக்கு கணக்கு தெரியாது.. ஆனா ஃபார்முலா தெரியும்.. அங்க அவர் தான் டாப்ல இருப்பாரு.. அஸ்வின் கருத்து
மறுபுறம் இங்கிலாந்துக்கு பயத்தை காட்டும் வகையில் விளையாடிய ஸ்காட்லாந்து இப்போட்டியில் 10 ஓவரின் முடிவில் 1 விக்கெட்டை கூட விடாமல் அசத்தியது. இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் விக்கெட் இழப்பின்றி அதிக ஓவர்கள் (10.0) விளையாடிய அணி என்ற உலக சாதனையை ஸ்காட்லாந்து படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு க்ளாமோர்கன் அணிக்கு எதிராக வேர்விக்சைர் அணி விக்கெட் இழப்பின்றி 8.4 ஓவர்கள் விளையாடியதே முந்தைய சாதனையாகும்.