உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து அணி கைப்பற்ற இங்கிலாந்து நிர்வாகம் போட்ட ஸ்கெட்ச் – விவரம் இதோ

Williamson-1
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின், இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், இங்கிலாந்தில் உள்ள சௌத்தாம்டன் மைதானத்தில், வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி மோதவிருக்கின்றன. இது ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி என்பதால், இப்போட்டியானது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு அணிகளுமே மிக வலுவான அணிகள் என்பதால், வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் எடுத்துள்ள ஒரு முடிவால், இந்தியாவுடன் விளையாடப்போகும் நியூசிலாந்து அணி மிகப் பெரிய பலனை அடையவிருக்கிறது.

Nz vs Eng

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாக, நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி ஜூன் மாதம் 2ஆம்தொடங்கி 6ஆம் தேதியிலும், இரண்டாவது போட்டி 10ஆம்தேதி தொடங்கி 14ஆம் தேதியிலும் முடிவடைய இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் நியூசிலாந்து அணிக்கு, வார்ம் அப் போட்டிகளாகவே அமைந்திருக்கிறது, என்பதே உண்மையான விஷயமாகும். மேலும் இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக எந்த ஒரு வார்ம் அப் போட்டியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்கள் கொரானா விதிமுறைகளின் கீழ் சில பயிற்சிகளை மேற்கொள்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிவிட்டு வரும் நியூசிலாந்து வீரர்கள், போதிய பயிற்சியையும், அந்நாட்டின் சூழ்நிலையையும் நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள் என்பதால், எந்த பயிற்சிப் போட்டிகளும் இல்லாமல் களமிறங்கப்போகும் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை கொடுப்பார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில், ஐபிஎல்லில் பங்குபெற்ற இங்கிலாந்து வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, புதிய வீரர்களை களமிறக்கப் போகிறோம் என்று இங்கிலாந்து அணி நிர்வாகத்தின் இயக்குனரான ஆஷ்லே கைல்ஸ் தெரிவித்திருக்கிறார். அதன்படி பார்த்தால், இங்கிலாந்து அணியில் இடம்பெற போகும் ஒரே நட்சத்திர ஆட்டக்காரராக ஜோ ரூட் மட்டுமே இருப்பார்.

மற்ற முன்னனி வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், மொயீன் அலி ஆகியோர் அணியில் இடம்பெற மாட்டார்கள். மேலும் காயத்தினால் அவதிப்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ் மற்கும் ஜோப்ரா ஆர்ச்சரும் இத்தொடரில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். எந்த விதத்தில் பார்த்தாலும் இங்கிலாந்தின் C அணியுடன்தான் நியூசிலாந்து அணி மோதவிருக்கிறது. ஒருவேளை இத்தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றிவிட்டால், அது அந்த அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் மன ரீதியாக மிகப் பெரிய பலத்தை கொடுக்கும்.

INDvsNZ

2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடர்களில், இறுதி ஆட்டம் வரை சென்று தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து அணி, இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப்பை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறது. அதற்கேற்றார் போல், சூழ்நிலைகளும் இந்திய அணிக்கு வாய்த்ததை விட நியூசிலாந்து அணிக்கே சாதகமாக அமைந்துள்ளது. என்னதான் சூழ்நிலைகள் நியூசிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்தாலும், பேட்டிங் பௌலிங் என இரண்டிலுமே சம பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்துவது என்பது அத்தனை சுலபமான காரியம் கிடையாது என்பதை நியூசிலாந்து அணியும் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும்.

Advertisement