மீண்டும் தள்ளிப்போக இருக்கும் அடுத்த பிரமாண்ட கிரிக்கெட் தொடர் – ரசிகர்கள் ஏமாற்றம்

- Advertisement -

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது கிரிக்கெட் போட்டிகளும் எப்போது துவங்கும் என்று தெரியாத நிலையே நீடிக்கிறது. மேலும் அடுத்து எப்போது என்று ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சோக செய்தியாக சர்வதேச கிரிக்கெட் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி கரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா விளையாட தொடர் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக இங்கிலாந்தில் 28ம் தேதி வரை அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு ரசிகர்கள் மீண்டும் ஆரவாரமாக மைதானத்தில் கூடுவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.

இதற்கு முன்னதாக கடந்த மாதம் இலங்கை சென்று இங்கிலாந்து அணி கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. ஆனால் அதற்குல் கரோனாவின் காரணமாக பயிற்சி ஆட்டத்தின் பாதியில் இங்கிலாந்து அணி நாடு திரும்பியது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து விளையாட இருக்கிறது.

Eng-vs-Aus

ஆனால் இந்த தொடர் நடைபெறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான். குறிப்பாக ஜூலை மாதம் 3ம் தேதியிலிருந்து 16ம் தேதி வரை 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது. தற்போது உள்ள சூழலில் இந்த தொடர் கண்டிப்பாக சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

England

இதன் காரணமாக இந்த தொடரை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. அப்படி பார்த்தால் டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்த போட்டிகள் நடத்தலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவலினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement