பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது அவர்களது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள வேளையில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இதுதான் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணி களமிறங்கி இருப்பதால் இந்திய அணிக்கு இது முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
ஏற்கனவே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தோல்வியை சந்தித்து பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணியானது இந்த நான்காவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். இதன் காரணமாக இந்த போட்டியானது இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது.
இந்நிலையில் நாளை துவங்க இருக்கும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி ஒரு நாளுக்கு முன்பாகவே ஒரு முக்கிய மாற்றத்துடன் தங்களது பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது. அந்த வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த பிளேயிங் லெவனில் : கடந்த போட்டியின் போது காயம் காரணமாக அவதிப்பட்ட சோயிப் பஷீர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக லியாம் டாவ்சன் இடம் பிடித்துள்ளார்.
அவரை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இங்கிலாந்து அணியில் இடம் பெறவில்லை. மூன்றாவது போட்டியில் விளையாடிய அதே அணியே இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. அதன்படி இந்திய அணிக்கு எதிரான நான்காவது போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ
1) ஜாக் கிராவ்லி, 2) பென் டக்கெட், 3) ஆலி போப், 4) ஜோ ரூட், 5) ஹாரி புரூக், 6) பென் ஸ்டோக்ஸ், 7) ஜேமி ஸ்மித், 8) லியாம் டாவ்சன், 9) கிறிஸ் வோக்ஸ், 10) பிரைடன் கார்ஸ், 11) ஜோப்ரா ஆர்ச்சர்.



