இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள வேளையில் இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இந்திய வீரர்களின் காயம் காரணமாக சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பதை இந்த பதிவில் காணலாம். அந்தவகையில் இந்த நான்காவது போட்டிக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் வழக்கம் போலவே தொடர்வார்கள். அதேபோன்று கடந்த சில நாட்களாகவே அதிகளவில் விவாதிக்கப்பட்டு வரும் மூன்றாவது இடத்தில் கருண் நாயருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
அதனை தவிர்த்து நான்காவது இடத்தில் வழக்கம் போல கேப்டன் சுப்மன் கில் தொடர்வார். அதேபோன்று ஐந்தாவது இடத்தில் கடந்த போட்டியின் போது விரலில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் இந்த போட்டியில் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கடுத்து ஆறாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜுரேல் விளையாடுவார்.
அதற்கடுத்து சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக 7 மற்றும் 8 ஆகிய இடங்களில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாடுவார்கள். ஒன்பதாவது இடத்தில் பும்ராவும், பத்தாவது இடத்தில் அறிமுக வீரராக அன்ஷுல் கம்போஜ், 11-ஆவது இடத்தில் முகமது சிராஜும் விளையாட வாய்ப்புள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : பர்மிங்காமில் இங்கிலாந்துக்கு பயந்து அதை செஞ்ச இந்தியாவை.. அந்த பயத்தை வெச்சே தோற்கடிப்போம்.. ஹாரி ப்ரூக்
1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) கருண் நாயர், 4) சுப்மன் கில், 5) ரிஷப் பண்ட், 6) துருவ் ஜூரேல் (வி.கீப்பர்), 7) ரவீந்திர ஜடேஜா, 8) வாஷிங்டன் சுந்தர், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) அன்ஷுல் கம்போஜ், 11) முகமது சிராஜ்.



