திட்டமிட்டபடி இந்த தொடர் நடைபெறும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு – விவரம் இதோ

INDvsENG
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக கடந்த 2 மாதத்திற்கும் மேலாக எந்தவித கிரிக்கெட் தொடர்களும் நடைபெறவில்லை. மேலும் அடுத்து மீண்டும் எப்போது கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் என்ற கேள்விக்கு பதிலாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று ஜூன் 4ம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது.

Aus vs Eng

- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக இந்த திட்டம் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் தற்போது ஜூலை 1ஆம் தேதி வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்கள் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த மாதம் ஜூன் 8ஆம்தேதி இங்கிலாந்து சென்று விளையாடவுள்ளது. தற்போது அந்த டெஸ்ட் தொடருக்காக பயிற்சி செய்ய உள்ளது.

ஏனெனில் இங்கிலாந்தில் இந்த சம்மர் சீசனில் நடைபெறவேண்டிய போட்டிகள் நடைபெறாமல் இருந்தால் அந்த கிரிக்கெட் வாரியத்திற்கு 3653 கோடிகள் நஷ்டம் ஏற்படும். இதன்காரணமாக எப்படியாவது இந்த தொடர்களை நடத்தி விடலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வந்தது.

இங்கிலாந்து அரசாங்கமும் வரும் ஜூன் 1ம் தேதி முதல் விளையாட்டுப் போட்டிகளுக்கான அனுமதி படிப்படியாக கொடுக்கப்படும் என்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி விளையாட இருந்த தொடர்களை மறு திட்டமிடப்பட்டு தொடர்ந்து அறிவித்து வருகிறது. இந்த திட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வரும் 8ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இதற்கான அழைப்பை இந்த மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இங்கிலாந்து கொடுக்கும் என்றும் தெரிகிறது. மேலும், முதல் டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்னர் 4 வாரங்கள் இடைவெளி கண்டிப்பாக விடப்படும். ஜூலை 8 ,ஜூலை 16, மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் இந்த மூன்று போட்டிகள் நடைபெறும் என்று தெரிகிறது. இதற்கான அட்டவணை வெகு சீக்கிரத்தில் வெளியிடப்படும்.

England

இதனால் கொரோனா முடிந்து இந்த தொடரே முதலில் நடைபெறும் என்று தெரிகிறது. அப்படி நடைபெறும் பட்சத்தில் அதில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்த்தல் மட்டுமே தெரியும்.

Advertisement