தோல்வியின் விளிம்பில் இருக்கும் இங்கிலாந்து அணி படைத்த 66 வருட சாதனை – விவரம் இதோ

Eng-bess
- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்தது. இதில் ஒரு சிறப்பம்சமாக மொத்த 329 ரன்களையும் இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்தே எடுத்தனர். இங்கிலாந்து வைடு, நோ-பால், பை, லெக் பை என எக்ஸ்ட்ராவாக ஒரு ரன் கூட கொடுக்கவில்லை.

anderson

- Advertisement -

இதன்மூலம் 66 வருடங்கள் கழித்து இந்திய அணியின் சாதனையை தற்பொழுது முறியடித்து காட்டியுள்ளது. இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து நன்றாக டர்ன் ஆகிய நிலையிலும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் மிக சிறப்பாக கீப்பிங் செய்தார். 329 ரன்கள் வரை எக்ஸ்ட்ராவாக ஒரு ரன் கூட கொடுக்காததன் மூலம் இதன் முன்னிருந்த 66 வருட கிரிக்கெட் சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது.

இதற்கு முன் 1955-ல் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக எக்ஸ்ட்ராவாக ஒரு ரன்கூட விட்டுக் கொடுக்காமல் பாகிஸ்தானை 328 ரன்னிற்க்கு ஆல்-அவுட் ஆக்கியது.அதன் பின்னர் 66 வருடங்கள் கழித்து இந்த சாதனையை தற்போது சென்னையில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி தற்பொழுது முறியடித்து காட்டியுள்ளது.

Archer

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 252 மற்றும் 247 என இரண்டு முறை இங்கிலாந்து அணி எக்ஸ்ட்ரா ரன்கள் ஏதும் கொடுக்கவில்லை. அதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 236 ரன்களில் எக்ஸ்ட்ராவாக எந்த ரன்னும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியின் போது எக்கச்சக்க நோபால்களை வீசிய நிலையில் தற்போது இவர்கள் எக்ஸ்ட்ரா வீசாமல் அவர்கள் பந்துவீசியது பாராட்டுகளை பெற்று வருகிறது.

தற்போது மூன்றாவது நாளை கடந்துள்ள இந்த போட்டியில் இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது. மேலும் நாளைய நாலாவது நாள் போட்டியிலேயே இந்திய அணி பெற்று பெறுவது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை சமன் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement