பிங்க்பால் டெஸ்ட் : முறைப்படி விசாரிக்க ஐ.சி.சி யிடம் புகார் அளிக்க உள்ள இங்கிலாந்து அணி நிர்வாகம் – காரணம் இதுதான்

Eng-bess
- Advertisement -

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிப்பதோடு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தி இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த மைதானம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் டெஸ்ட் போட்டிக்கு தகுதியான மைதானம் இதுவா ? என்பது போன்ற கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வி குறித்தும் இந்த மைதானத்தின் தன்மை குறித்தும் ஐசிசி அமைப்பிடம் இங்கிலாந்து அணி அதிகாரப்பூர்வ புகார் அளிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத் மைதானம் மோசமாக இருப்பதாகவும், இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்ய சாதகமான அமைப்பு இல்லை என்றும் இங்கிலாந்து அணியின் புகாரில் குறிப்பிடப்பட உள்ளது. மேலும் இந்திய அணியின் திட்டத்தின்படி இந்த மைதானம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டது என்றும் இதில் அதிக அளவில் களிமண் இருந்தது மட்டுமின்றி வெடிப்புகளும் காணப்பட்டதால் பிட்ச் அவர்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

axar

அதுமட்டுமின்றி மைதானத்தில் கொஞ்சம்கூட புற்க்கள் இல்லை மேலும் இது முறையான பேட்டிங் செய்யக்கூடிய மைதானமும் கிடையாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற மைதானத்தின் மோசமான தன்மையினால் தான் இந்த போட்டியை நாங்கள் இழந்ததாகவும், இரண்டே நாட்களில் போட்டி முடிவடைவது சரியான விளையாட்டு கிடையாது என்றும் ஐசிசி இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என இங்கிலாந்து அணி புகார் கொடுக்க உள்ளது.

kohli

மேலும் இந்த பிட்ச் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த போட்டியில் கிடைத்த வெற்றி குறித்து அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ள உள்ளனர். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ மெயில் ஐ.சி.சி க்கு அனுப்பப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நெருங்கும் இவ்வேளையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement