இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே கவுன்டி அணியுடன் பயிற்சி போட்டியில் மோதி வரும் வேளையில் தற்போது இந்த இந்திய தொடருக்கான இங்கிலாந்து அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்றும் பின்னர் அடுத்த மூன்று போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில் முன்னணி வீரர்களான ஸ்டோக்ஸ், பட்லர், பேர்ஸ்டோ மற்றும் சாம் கரண் ஆகிய வீரர்கள் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.
அதே போன்று இந்த அணியில் முக்கியமான குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி விளையாடிய ஒல்லி ராபின்சன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் சிறுவயதில் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களுக்கு எதிராக பதிவிட்ட ஆபாச கருத்துகளில் காரணமாக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை செய்யப் பட்டிருந்தார்.
இப்படி எட்டு மாதங்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடைசெய்யப்பட்ட ஒரு வீரரை மீண்டும் பொதுமன்னிப்பு கொடுத்து தற்போது இங்கிலாந்து நிர்வாகம் அணியில் இணைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்திய தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி இதோ :
ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டூவர் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஜாக் கிரௌலி, சாம் கரன், ஹஷிப் ஹமீத், டான் லாரன்ஸ், ஜாக் லீச், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், டோமினிக் சிப்ளே, பென் ஸ்டோக்ஸ், மார்க் உட்