மீண்டும் அணியில் இணைந்த சீனியர் வீரர்கள். இதைவிட ஸ்ட்ராங்கான டி20 டீம் இருக்காது – லிஸ்ட் இதோ

EngvsPak
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது கடந்த 8ஆம் தேதி துவங்கியது. இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடருக்கு முன்பாக இலங்கை அணிக்கு எதிரான தொடரை முடித்த இங்கிலாந்து அணியில் சீனியர் வீரர்களுக்கு 7 ஏழு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

engvspak

- Advertisement -

இதன் காரணமாக கேப்டன் மோர்கன் உட்பட முக்கியமான வீரர்கள் அனைவரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனிமைப்படுத்தும் நிலை ஏற்பட்டது. இதனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்த அணியில் ஏழு வீரர்கள் அறிமுக வாய்ப்பைப் பெற்றனர்.

புதிய அணியாக இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 16ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான அணியில் மோர்கன் உட்பட ஒன்பது சீனியர் வீரர்கள் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Eng

அதனால் தற்போது இருக்கும் இங்கிலாந்து அணியை விட வலுவான அணியை நாம் பார்க்க முடியாத அளவிற்கு இங்கிலாந்து அணி பலமாக உள்ளது. இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் இதோ : 1. மோர்கன், 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜேக் பால், 5. டாம் பாண்டன், 6. பட்லர், 7. டாம் கர்ரன், 8. லேவிஸ் கிரேகோரி, 9. கிறிஸ் ஜோர்டான், 10. லியம் லிவிங்ஸ்டன், 11. சகிப் மெஹ்மூத், 12. தாவித் மலான், 13. மேட் பார்கின்சன், 14. அடில் ரஷித், 15. ஜேசன் ராய், 16. டேவிட் வில்லே.

Advertisement