திடீரென தடம்புரண்ட இங்கிலாந்து அணி. புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம் – காரணம் இதுதான்

Eng
Advertisement

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை (ஜூலை 8) எட்டாம் தேதி துவங்குகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி எட்டாம் தேதியும், இரண்டாவது போட்டியில் 10-ஆம் தேதியும், மூன்றாவது போட்டி 13ம் தேதியும் துவங்குகிறது.

engvspak

இந்நிலையில் இந்த தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி 3 வீரர்களுக்கும் 4 நிர்வாக அதிகாரி களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்த வேண்டிய நிலைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக புதிய அணியை களமிறக்க இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் முடிவு செய்துள்ளது. அதன்படி காயம் காரணமாக கடந்த சில தொடர்களில் பங்கேற்காமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் மூத்த வீரராக இருந்து அணியை கேப்டனாக வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

stokes

ஐ.பி.எல் போட்டிக்குப் பின்னர் இங்கிலாந்து அணிக்காக விளையாடாமல் இருந்த அவர் மீண்டும் கேப்டன் பதவியுடன் அணிக்கு திரும்பி இருக்கிறார். அதுமட்டுமின்றி அணியில் ஏழு புதுமுக வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் முதன்மை அணியில் இடம்பெற்ற அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் நிச்சயம் புதிய அணியே பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் என்று தெரிகிறது.

சமீப காலமாகவே அசைக்கமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணிக்கு இப்படி ஒரு சோதனையா என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement