மறந்து போய் பந்தில் எச்சில் தடவிய இங்கிலாந்து வீரர். இதற்கு ஐ.சி.சி ரூல்ஸ் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

wi
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருந்த நிலையில் இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 117 நாட்களுக்குப்பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் கடந்த எட்டாம் தேதி சவுதியில் சவுதாம்ப்டன் நகரில் துவங்கியது.

broad

இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த தொடரின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஐசிசியின் விதிமுறை மீறல் ஒன்று நடைபெற்றுள்ளது.

- Advertisement -

இந்த விடயம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடம் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான டோமினிக் ஷிப்லி பீல்டிங் செய்யும் போது பந்தை பிடித்து எதேர்ச்சியாக எச்சில் தடவினார் மேலும் அவர் இதை வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் இயல்பாக இருப்பது போலவே உணர்ந்ததால் அது போன்று அவர் செய்தார் உடனடியாக தனது தவறை நேரடியாக ஒப்புக் கொண்டார்.

wi 1

அவர் நடுவரிடம் சென்று நான் எச்சில் தெரியாமல் தடவி விட்டேன் என்று உண்மையை ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக அம்பயர்கள் தங்களது பாக்கெட்டில் வைத்திருந்த கிருமிநாசினி துண்டினை கொண்டு பந்தை முற்றிலும் முழுவதுமாக நன்றாக தேய்த்து சுத்தம் செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது .இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் பந்து பந்துவீச்சாளர்களிடம் கொடுக்கப்பட்டு மீண்டும் போட்டி நடைபெற்றது.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து அணிக்கு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவராகவே வந்து உண்மையை ஒப்புக் கொண்டதாகவும், முதல் முறை செய்த தவறு என்பதாலும் இதனை மன்னித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sibley

இதுபோன்ற விதிமீறல்களுக்கு அதாவது பந்தில் எச்சில் தடவினால் எதிரணிக்கு 5 ரன்கள் போனஸாக அளிக்கப்படும் என்று ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் இந்த போட்டியில் முதல்முறை இந்த தவறு ஏற்பட்டதால் போனஸ் ரன்கள் வழங்கப்படாமல் அவரை மன்னித்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement