இதுவரை இல்லாத அதிசயத்துடன் நடக்க இருக்கும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி – விவரம் இதோ

worldcup
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் போன்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

nz

- Advertisement -

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது. அடுத்து நேற்று நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எனவே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு அதிசய நிகழ்வு நடைபெற உள்ளது. அது யாதெனில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை உலக கோப்பை இறுதி போட்டியில் மற்ற அணிகளுடன் விளையாடி இருந்தாலும் ஒரு முறைகூட கோப்பையை கைப்பற்றியது கிடையாது.

ஆனால் இந்த முறை இங்கிலாந்து அல்லது நியூசிலாந்து ஆகிய அணிகளில் ஒரு அணி நிச்சயம் வெற்றிபெறும் எனவே புதிதாக ஒரு அணி முதன்முறையாக கோப்பையை கைப்பற்ற உள்ள அதிசய நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement