10 வருஷத்துல இதுதான் முதல் முறை. இந்திய அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் 2 பேர் – விவரம் இதோ

Hameed
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி நேற்று லீட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

Kohli

- Advertisement -

அதன்பின்னர் புஜாரா ஒரு ரன், விராட் கோலி 7 ரன்கள், ரகானே 18 ரன் என மிடில் ஆர்டர் அடுத்தடுத்து ஆட்டம் இருந்து வெளியேற பின்பகுதியில் பண்ட் 2 ரன், ஜடேஜா 4 ரன், ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இறுதியில் இசாந்த் சர்மா 8 ரன்களும் பும்ரா 3 ரன்களும் குவித்தனர். இதன் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்சை 78 ரன்களுக்குள் சுருண்டு பரிதாப நிலைக்கு சென்றது.

இந்திய அணி சார்பாக ரோஹித் அதிகபட்சமாக 19 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவு வரை 42 ஓவர்களை சந்தித்து 120 ரன்களை குவித்துள்ளது.

burns

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் யாதெனில் நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவு வரை அவர்கள் ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு துவக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹஸீப் ஹமீது ஆகியோர் 120 ரன்கள் குவித்துள்ளனர். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து ஓப்பனர்கள் குவிக்கும் 100 ரன்கள் பாட்னர்ஷிப் இதுதான்.

hameed 1

கடைசியாக 2011ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக அலெஸ்டர் குக் மற்றும் ஆண்ட்ரு ஸ்டார்ஸ் ஆகியோர் இணைந்து நூறு ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அதற்கு பின்னர் 10 ஆண்டுகள் கழித்து தற்போது இவ்விருவரும் இந்திய அணிக்கு எதிராக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement