கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர். இங்கிலாந்து அணியில் ஏற்பட்ட பரபரப்பு – தனிமை படுத்தப்பட்ட வீரர்

Alex-Hales
- Advertisement -

பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த தொடரில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் பலரும் தங்களது தாயகத்திற்கு திரும்புகின்றனர்.

Hales 1

- Advertisement -

இந்த தொடருக்கான கராச்சி கிங்ஸ் அணியில் இங்கிலாந்து அணியை சேர்ந்த துவக்க வீரரான வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றார். 7 ஆட்டங்களில் விளையாடி 239 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த கிரிஸ் லின்னை தொடர்ந்து தற்போது இவரும் பாகிஸ்தான் லீக்கில் இருந்து விலகி சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால் உடனே பிஎஸ்எல் டி20 போட்டியிலிருந்து விலகி, இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். இதன் காரணமாக பிஎஸ்எல் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டன. மேலும் இங்கிலாந்து சென்ற அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Hales

இந்நிலையில் பிஎஸ்எல் போட்டி ஒத்திவைக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா அளித்த பேட்டியில், அலெக்ஸ் ஹேல்ஸிடம் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டன. அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றார். இதன் காரணமாக பிஎஸ்எல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இங்கிலாந்து திரும்பிய அலெக்ஸ் ஹேல்ஸ், சுயமாக வீட்டுக்குள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரது மருத்துவ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

hales

ஒருவேளை இவருக்கு கொரோனா வைரஸ் இருக்கும் பட்சத்தில் அவரிடமிருந்து மற்ற வீரர்களுக்கு நிச்சயம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அதனால் எத்தனை பேருக்கு இந்த வைரஸ் பரவ இருக்கிறதோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு கொரோனா இருப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement