இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இலங்கை அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இதன் காரணமாக 2-0 என்ற கணக்கில் இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு 386 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் மூன்று வீரர்கள் அரைசதம் அடிக்க இலங்கை அணி அபாரமாக ரன் குவித்தது மேலும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 341 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இலங்கை அணி 37 ரன்கள் முன்னிலை பெற்றது. இதே போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 186 ரன்கள் குவித்தார்.
இலங்கையின் பந்துவீச்சாளர்லசித் எம்புல்டேனியா 7 விக்கெட் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இலங்கை அணி தனது 2-வது ஆட்டத்தில் வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் காரணமாக இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 43 ஓவர்களில் 164 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஜோ ரூட் இரட்டை சதம் விளாசி இருந்தார் .
இரண்டாவது போட்டியில் 186 ரன் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார் இந்ததொடரில் மட்டும் 426 ரன்கள் குவித்திருக்கிறார் ஜோ ரூட். இவரது ஆட்டத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் இவரை பாராட்டி இருக்கிறார். அவர் கூறுகையில்…
ரூட் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். கெவின் பீட்டர்சன் மற்றும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனைகளை கடந்து அதிக ரன்கள் குவித்து சாதனை முறியடிப்பார். 200 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் கண்டிப்பாக இவரால் விளையாட முடியும் என்று புகழ்ந்து பேசியிருக்கிறார்.