இங்கிலாந்து தொடர் திட்டமிட்டபடி நடைபெறும். 702 கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது – அதிகாரபூர்வ அறிவிப்பு

Eng
- Advertisement -

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரனோ அச்சுறுத்தலுக்கு இடையே கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. தற்போது அந்த தடைகளை எல்லாம் மீறி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்றுள்ளது.

wivseng

இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை எட்டாம் தேதி சவுத்தாம்டன் நகரில் துவங்குகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் ஜூலை 28-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து வீரர்களின் முழுமையான பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதனால் இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் இன்று பயிற்சியினை துவங்கினர்.

- Advertisement -

இதனையொட்டி இங்கிலாந்து வீரர்களுக்கு தொடர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர், ஊழியர்கள், நடுவர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், போட்டி நடைபெறும் மைதான ஊழியர்கள், ஹோட்டல் ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஒரே கட்டமாக சோதனை நடத்தப்பட்டது.

கடந்த மூன்றாம் தேதி முதல் 24ம் தேதி வரை மொத்தம் 702 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பரிசோதனை முடிவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மட்டுமின்றி இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறியுள்ளது.

england

கடந்த 10 தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தொடருக்கு முன்னர் ஒரு பரிசோதனை செய்யப்பட்டு தொடர் நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முழு தகவல்களையும் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement