இந்திய அணியை சமாளிக்க மீண்டும் அணிக்கு திருப்புகிறாரா ஸ்டோக்ஸ் ? – இங்கி கோச் கொடுத்த விளக்கம்

Stokes
- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் இங்கிலாந்து அணியில் மூன்று வீரர்கள் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும் மற்றபடி எந்த வீரரும் சோபிக்கவில்லை என்ற கருத்தும் தென்படுகிறது. இங்கிலாந்து அணியின் மிடில் வரிசை பலவீனமாக இருந்ததால் இரண்டாவது போட்டியில் முன்னணி வீரரான மொயின் அலி அணியில் சேர்க்கப்பட்டார்.

bumrah 1

- Advertisement -

ஆனால் அவர் அணியில் இணைந்தது பலனளிக்கவில்லை. இந்நிலையில் வருகிற 25-ஆம் தேதி லீட்சில் 3வது டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நிச்சயம் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் அவர்களது நாட்டிலேயே இந்திய அணிக்கு எதிராக பெரிதும் தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான இந்த தடுமாற்றத்தை சமாளிக்க பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்புகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் கூறுகையில் : ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்புவது தொடர்பாக எந்த ஒரு அழுத்தத்தையும் நாங்கள் தர மாட்டோம். அவர் எப்போது தயாராக இருக்கிறாரோ அப்போது என்னிடம் வந்து அதனை தெரியப்படுத்துவார். அப்போது அவர் அணிக்குள் இணைந்தால் போதும்.

Stokes

அதுவரை அவரை நாங்கள் அணிக்கு திரும்பும் படி வற்புறுத்த மாட்டோம். ஏனெனில் தற்போது அவருடைய நலனும், அவரது குடும்பத்தின் நலம் தான் முக்கியம் அவர் நிச்சயம் மனவலிமை பெற்று மீண்டும் அணிக்கு திரும்பும் போது பலமாக வருவார். அப்போது நாங்கள் பென் ஸ்டோக்ஸ்ஸை இரு கை நீட்டி வரவேற்போம் அதுவரை நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறினார்.

Stokes

ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பிறகு இந்திய தொடருக்கு முன்னதாக தான் மனரீதியாக அழுத்தத்தில் இருப்பதனால் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற ஓய்வு எடுத்துக்கொள்வதாக அறிவித்து இருந்தார். அதனை இங்கிலாந்து நிர்வாகம் ஏற்று உள்ளதால் அவராக மீண்டும் அணியில் இணையும் வரை அவரை நிர்வாகம் நிர்பந்திக்காது என்று கூறப்படுகிறது.

Advertisement