323 ரன்ஸ்.. 16 வருடம்.. இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்தை சாய்த்த இங்கிலாந்து.. மாபெரும் சாதனை வெற்றி

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி டிசம்பர் ஆறாம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்த களம் இறங்கிய இங்கிலாந்து கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடி 280 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 123, ஓலி போப் 66 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

இங்கிலாந்து மிரட்டல்:

பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்தை அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து வெறும் 125க்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 37 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் ஹாட்ரிக் உட்பட 4, பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதன் பின் களம் இறங்கிய இங்கிலாந்து தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் அட்டகாசமாக பேட்டிங் செய்து 427-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 106, ஹரி ப்ரூக் 55, பென் டக்கெட் 92, ஜேக்கப் பேத்தல் 96 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி, டிம் சௌதீ தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இறுதியில் 583 என்ற மெகா இலக்கை துரத்திய நியூசிலாந்து மீண்டும் சுமாராக விளையாடி 259க்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் ப்ளண்டல் 115, நாதன் ஸ்மித் 42 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

சாதனை வெற்றி:

அதனால் 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக ரன்கள் அடிப்படையில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு மௌன்ட் மௌங்கனியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். இது போக 2 – 0* (3) என்ற கணக்கில் இந்த தொடரை இங்கிலாந்து ஆரம்பத்திலேயே வென்றுள்ளது.

இதையும் படிங்க: ஹெட் – சிராஜ் மோதலில் உண்மையே வேற.. இந்தியாவின் பவுலிங் மிஸ்ஸாக இதான் காரணம்.. மோர்கெல் பேட்டி

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 16 வருடங்கள் கழித்து ஒரு தொடரை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது. மறுபுறம் சமீபத்தில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்து நியூசிலாந்து வரலாற்று வெற்றி பெற்றது. ஆனால் தற்போது சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து அணியிடம் நியூசிலாந்து மோசமான தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement